Breaking News

அமைச்சர்கள் நியமன விடயத்தில் வடக்கு முதல்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது !

முகங்களை பார்க்காது மக்களுக்கு சேவையாற்றுபவர்களுக்கு  வாக்களி யுங்கள் என மக்களிடம் கோரிய வட மாகாண முதலமைச்சர் தனது அமை ச்சர்களை சிறந்ததாக தேர்வு செய்ய தவறிழைத்துள்ளதாக வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் ம. தியாகராஜா குற்றம் சுமத்தியுள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியிலுள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெ ற்றது. அங்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், 

கடந்த வருடத்திற்காக எனக்காக ஒது க்கப்பட்ட நிதியில் 9 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வேலைத் திட்டம் இன்னமும் முடிக்கப்படாத நிலையில் உள்ளது. இச் செயற்பாடானது எனது நன்மதிப்பை கெடுக்கும் செயலாகவே நான் கருதுகிறேன். 

ஏனைய உறுப்பினர்களுடைய வேலை திட்டங்கள் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ள நிலையில் என்னுடைய வேலை திட்டம் மாத்திரம் முடிக்கப்படவி ல்லை. அதற்கான காரணம் என்ன என்ற விடயத்தை முதலமைச்சர் மற்றும் அவைத்தலைவர் ஆகியோர் விசாரித்து அறிய வேண்டும். 

அமைச்சர்களால் அதிகாரிகளை கொண்டு வேலை வாங்க முடியவில்லை என்றால் அதிகாரிகளை மாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அதனை செய்ய வில்லை. இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் முகங்களை பார்க்காது சேவை செய்பவர்களை பார்த்து வாக்களியுங்கள் என மக்களிடம் கோரியுள்ள முதல மைச்சர் அமைச்சர்களை தேர்வு செய்யும் போது சிறந்தவர்களை தேர்வு செய்ய தவறிவிட்டார் என நினைக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார். 

உறுப்பினரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் முகமாக கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், உறுப்பினர்களின் ஒதுக்கீட்டிற்கான வேலைத் திட்டங்கள் தொடர்பில் கடந்த 2 மாதங்களில் 3 தடவைகள் அதிகாரி களை அழைத்துப் பேசியிருக்கிறோம். 

அனைத்து வேலைத்திட்டங்களும் முடிக்கபப்ட்டு விட்டதாகவே தெரிவித்து ள்ளனர். ஆனால் உறுப்பினரின் குற்றச்சாட்டு தொடர்பில் அதிகாரிகளிடம் விசாரித்து அது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக  தெரி வித்துள்ளார்.  

அவ்வேளை கருத்து வழங்கிய எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா உறுப்பி னர்களின் ஒதுக்கீடுகள் உரிய முறையில் கொடுக்கப்படவில்லை எனவும், பய னாளிகள் கேட்கும் பொருளை கொள்வனவு செய்து கொடுக்காது, தாம் சொல்லும் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு அதிகாரிகள் நிர்ப்பந்தி ப்பதாகவும் பயனாளிகள் தன்னிடம் முறையிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.