தேர்தல் தீர்வுக்காக காணாமல் ஆக்கப்பட்டோரை பயன்படுத்தாதீர்கள்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சி னைகளை தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுப டுத்தாதீர்கள் என, அரசியல் கட்சிகளிடம், கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்ப ட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கோரி க்கை விடுத்துள்ளது. காணாமல் ஆக்கப்ப ட்டவர்களின் உறவினர்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தராதவர்கள் இடம்பெ றவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் இந்த விடயத்தை பிராச்சாரத்திற்கு பயன்படு த்துவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவின ர்கள் சங்கத்தினதும் கிளிநொச்சி சங்கத்தினதும் தலைவி யோகராசா கனகர ஞ்சனி ஊடகங்களுக்கு செவ்வி வழங்கியபோதே மேற்கண்டவாறு தெரிவித்து ள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்.....
யுத்தம் முடிவுக்கு வந்து 8 வருடங்களை கடந்த நிலையிலும் எங்கள் காணா மல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.
நாங்கள் நம்பிய எங்களது பிரதி நிதிகளாலும் எங்களுக்கு ஏமாற்றம்.
இந்த நிலையில் நாங்கள் எங்களது பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி போராட்டத்தை ஆரம்பித்து நேற்றுடன் (31) 315ஆவது நாள்.
இரவு பகலாக நாங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வீதியில் போராடிக் கொண்டி ருக்கின்றோம்.
நாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்டுள்ளோம், எனத் தெரிவித்தார்.
அத்து டன், இந்த புதிய வருடத்திலாவது எங்களது விடயத்தில் அரசியல் தரப்பின ர்கள், அக்கறை செலுத்த வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண ர்வுகளை புரிந்துகொண்டு நாட்டின் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் உரிய பதிலை வழங்க வேண்டும்.
அதற்கு தமிழ் தலைமைகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக ளுக்கு தீர்வினைப் பெற்றுத்தர முடியாதவர்கள் எங்களின் பிரச்சினையை தேர்தல் காலங்களில் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தக் கூடாது, அதனை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான நாங்கள் விரும்பவில்லை ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.