Breaking News

பிணைமுறி ஊழல் விவகாரத்தினால் எதிர்காலத்தில் சிக்கல் !

இலங்கை மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரம் வெளிப்பட்டுள்ள மையினால் இலங்கைக்கு உதவி வழ க்கும் நாடுகள் கவலையடைந்துள்ள துடன் நிதியுதவிகளைப் பெறுவதில், அரசாங்கம் எதிர்காலத்தில் பல சிக்க ல்களை சந்திக்குமென அரசாங்கத் தக வல்கள் வெளியாகியுள்ளன. 
பெரும் சிரமங்களின் மத்தியில் மைத்திரி, ரணில் நல்லாட்சி அரசாங்கத்தைக் பதவிக்கு கொண்டு வந்ததன் நோக்கம் உரியமுறையில் நிறைவேற்றப்பட வில்லை. மாறாக பாரிய நிதிமோசடி இடம்பெற்றதுடன் உதவி வழக்கும் நாடு கள் கூறியதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. 

பிணைமுறி ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறி க்கையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டு, குற்றவாளிகள் நீதிமன்றத்தின் ஊடாக தண்டிக்கப்படுவர் என கூறியதை உதவி வழங்கும் நாடுகள் வரவேற்றுள்ளன. 

ஆனால் இலங்கை அரசியலில் பிரதான அரசியல் கட்சிகள் இவ்வாறு பாரிய நிதி மோசடியில் ஈடுபடுவதால் அபிவிருத்தித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் அபிவிருத்திக்காக வழங்கப்படும் நிதிகள் உரிய முறையில் பயன்படு த்தப்படுவதில்லையென உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்து ள்ளனர்.

அதேவேளை வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பனவுடன் தொடர்பு கொண்ட பிரதிநிதிகள், கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். எதிர்காலத்தில் இவ்வா றான பாரிய நிதிமோசடிகள் அதுவும் மக்களுக்கான நிதிகள் மோசடி செய்ய ப்படுமானால் நிதியுதவிகளை எதிர்பார்க்க முடியாதென்ற தொணியில் எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆட்சியமைத்து ஒரு வருடத்தில் ஆயிரத்தி 145 கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதை ஏற்க முடியாதெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமல்ல அனைத்து அரசியல் தலைவர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் கொழும்பில் உலக வங்கியின் பிரதி நிதி கூறியதாக உள்ளகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலம் தாமதிக்காமல் மோசடி செய்யப்பட்ட நிதி, இலங்கை மத்திய வங்கிக்கு கொண்டுவரப்பட வேண்டும் இல்லையேல் அபிவிருத்தித் திட்டங்களுக்காக வழங்குவதாக ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட நிதிகள், இலங்கை அரசாங்க த்துக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் இல்லையெனவும் தெரிவிக்கப்படு கின்றது.

இதேவேளை ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறி க்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நிதிமன்ற விசாரணை நடத்த ப்படுமெனவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அரசாங்கத்தின் சார்ப்பில் உதவி வழங்கும் நாடுகளுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சிக்கா லத்திலான பாரிய நிதி மோசடியை விட, மைத்திரி ரணில் நல்லாட்சி அரசா ங்கம் பதவியேற்று ஒரு வருடத்தில் நடைபெற்ற நிதி மோசடி, பத்து மடங்கு என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.