Breaking News

“தமிழரசுக்கட்சியின் செயலாளருக்கு பகிரங்க மடல்“ – மட்டுநேசன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு பதலளிக்கும் வகையில் தமிழரசுக்கட்சியின் செய லாளர் கி.துரைராஜசிங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழரசுக்கட்சியின்  செயலாளருக்கு மட்டுநேசன் என்பவர் பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியு ள்ளார். மேலும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

திரு. கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கம்
செயலர் இலங்கைத் தமிழர சுக் கட்சி
"சும்மா கிடந்த சங்கை"

அன்புடையீர்!

வணக்கம்,

அண்ணாதாசன் என்ற பெயரில் தங்களைக் கவிஞராக அறிந்திருக்கின்றோம். முதலமைச்சருக்குப் பதில் சொல்வதாக நினைத்து நீங்கள் வெளியிட்ட ஆக்கம் திறமையான கதாசிரியராக உங்களை அடையாளப்படுத்தியுள்ளது. 

அடுத்தது அனந்தியின் விடயத்தில் பொல்லைக்கொடுத்து அடிவாங்கும் நிலையை உங்களை அறியாமலே உருவாக்கி விட்டீர்கள். 2009 மே 18 க்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட சகல கட்சிகளின் பிரமுகர்களுமே கூட்டமைப்புக்குள் புலி வாசனை வந்துவிடக்கூடாது அதேவேளை மாவீரர் மற்றும் முன்னாள் போராளிகள் குடும்பத்தினரதும் வாக்குகள் உங்களுக்கு இரையாக வேண்டும் என்று நினை த்தீர்கள். 

அவ்வாறே செயற்பட்டீர்கள். மகிந்தவின் காலத்தில் வடமாகாண சபைத் தேர்தல் நடைபெற்றதால் கூட்டமைப்பை விடத் திருகுதாளங்களை மகிந்த செய்து கிழக்கு மாகாண சபை போல வடக்கும் பறிபோய்விடும் என்று அஞ்சி னீர்கள். 

அதனால்தான் விருப்பமில்லாவிடினும் அனந்தியை வேட்பாளராக்கி புலிகள் சார்பானோரின் வாக்குகளைக் கபளீகரம் (அல்லது அறுவடை) செய்யத் திட்ட மிட்டிருப்பீர்கள். ஒரு பெண் வேட்பாளர் அதுவும் ஒரு போராளியின் துணைவி, காணாமற் போனோர் தொடர்பான விடயங்களில் துணிச்சலுடன் செயற்ப ட்டவர். 

இந்த வகையில் அனந்திக்குக் கூடுதலான வாக்கு விழும் என்பது பொதுவாக எல்லோரும் எதிர்பார்த்ததே. தங்களுடைய ஒப்புதல் வாக்குமூலத்தில் அத னைக் குறிப்பிட்டுள்ளீர்கள். திட்டமிட்டே தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு எதி ராகச் செயற்பட்டதாகக் கூறும்போது தங்களைப் பற்றி எமது மக்கள் என்ன நினைப்பார்கள் என்று தற்போது உங்களைச் சூழ உள்ளவர்கள் சொல்ல மாட்டார்கள். 

அவ்வாறிருந்தும் இரண்டாவது நிலையில் அனந்தி 87870 வாக்குகள் பெற்றார். இவ்வளவு பிரயத்தனம் செய்தும் அனந்தி பெற்ற வாக்குகள் மாவைக்கும் தங்க ளுக்கும் எதிர்ப்புக் கண்ணாடியை மாட்ட வைத்து விட்டது. 

ஒரு காரணத்தை வைத்து அனந்தியைக் கட்சியிலிருந்து இடைநிறுத்தும் கடி தத்தை அனுப்பினீர்கள். அதற்கு முன்னர் இந்த வேலையைக் கட்சி நிர்வாகச் செயலகத்திலிருந்து ஆரம்பித்திருக்க வேண்டும். 

கட்சி நிர்வாகச் செயலர் குலநாயகம் வல்வெட்டித்துறை நகர சபை நிர்வா கத்தைக் குழப்ப மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கண்ட பின் அவருக்கு எதி ராக இவ்வாறான ஒரு ஒழுக்காற்று நடவடிக்கையை எடுத்திருந்தீர்கள் என்றால் எவரும் தங்கள் நேர்மையைச் சந்தேகித்திருக்க மாட்டார்கள். 

அப்போது காணாமற் போன தங்களின் பேனாவை அனந்தியின் பிரச்சினை வந்த போது தான் கண்டெடுத்தீர்களா? 

கடந்த பொதுத்தேர்தலில் வேட்பாளர் நியமனம் கிடைக்குமென எதிர்பார்க்க வேண்டாம் என அனந்திக்குத் தெரிவிக்கப்பட்டதாக அறிந்தோம். அனந்தி யாழ் .மாவட்டத்தில் மட்டும் 87870 வாக்குகள் பெற்றார். 

மாவைக்கோ யாழ் . கிளிநொச்சி இரு மாவட்டங்களிலுமே மொத்தமாக 58,732 வாக்குகள்தான் பெறமுடிந்தது. இதனால் தான் அமைச்சரவை மாற்றத்தின் போது அனந்திக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்க வேண்டாம் எனக் கட்சியால் வலியுறுத்தப்பட்டது. 

இதேவேளை இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக் காட்டவேண்டும். தேர்த ல்களின் இறுதி நேரத்தில் வாக்களிப்பைத் தமக்குச் சாதகமாக மாற்றுவதற்கு ஏதுவாக தமிழரின் கட்சி தில்லுமுல்லுகளைச் செய்தே வந்துள்ளது.

1983 உள்ளுராட்சித் தேர்தலிலிருந்து விலகிக்கொள்ளுமாறு காங்கிரஸ் தலை வர் குமார் பொன்னம்பலத்திடம் வேண்டுகோள் விடுத்தனர் புலிகள். அப்போது சீலனிடம் 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத்தேர்தலிலிருந்து நாங்கள் வில கவில்லை. 

யாழ்  நூலக எரிப்பைத் தொடர்ந்து தமிழரின் எதிர்ப்பை ஒரு முகமாகக் காட்டிட நாம் தேர்தலிலிருந்து விலகிவிட்டதாக கூட்டணி பொய்யான தக வலைப் பரப்பியது. 

பரப்புரை முடிவுறும் சமயத்தில் இந்த வதந்தி பரப்பப்பட்டதால் இதனை மறு த்து எம்மால் எதுவும் செய்யமுடியவில்லை. ஈழ நாடும் எரியூட்டப்பட்டு விட்டது .துண்டுப் பிரசுரம் வெளியிட முடியாது. நேர்மையற்ற விதத்தில் செய ற்பட்டு பத்து ஆசனங்களையும் கைப்பற்றியது கூட்டணி என்றார். 

அதுவரை காங்கிரஸ் அத் தேர்தலிலிருந்து விலகியிருந்ததாகத்தான் அச் சந்திப்பில் கலந்து கொண்ட புலிகள் நம்பியிருந்தனர். அதே போல் கடந்த பொதுத்தேர்தல் பரப்புரையின் இறுதி நாளன்று மயிலந்தனைப் படுகொலை வழக்கில் எதிரிகளான இராணுவத்தினருக்காக உயர் நீதிமன்றில் வாதாடியவர் கஜேந்திரகுமார் எனச் சுமந்திரன் தெரிவித்தார். 

இதனை மறுத்து கஜேந்திரகுமார் சொன்ன கருத்துக்களைப் பிரசுரிக்கப் பத்திரிகைகள் மறுத்துவிட்டன. அதனால் தேர்தல் முடிவு கஜேந்திரகுமாரு க்குப் பாதகமாக மாறிற்று. இந்த விடயத்தைத் தொலைக்காட்சி விவாதமொ ன்றில் கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.

அது தமது ராஜதந்திரம் என்ற பாணியில் புன்னகைத்தார் சுமந்திரன். மறு க்கவுமில்லை . அனந்தி அரசத்தரப்புடன் இணைந்து விட்டதாக மாகாண சபை த்தேர்தல் நாளன்று போலிப் பத்திரிகையொன்று செய்தியை வெளியிட்டது. இதனால் அனந்தி பாதிக்கப்பட்டார்.

தேர்தல் முடிந்ததும் இந்தச் சதி மேற்கொள்ளப்பட்டமை குறித்து கூட்டமைப்பு பாராளுமன்றில் பிரஸ்தாபிக்கவில்லை. கிணற்றில் போட்ட கல்லாக இருந்த இவ் விடயத்தைத் தாங்கள் முதலமைச்சருக்கு எதிராக வெளியிட்ட அறிக்கை யின் பின்பே பலராலும் ஊகிக்க முடிகிறது.

இதுவரை மாற்றுக் கட்சியினருக்கு எதிராகத்தான் இந்த தில்லுமுல்லுகள் நடைபெற்றன. சொந்தக் கட்சியினருக்கு எதிராகவும் இந்த வேலையைச் செய்துள்ளதாக தற்போது சந்தேகிக்க வேண்டியுள்ளது.

ஒழுக்காற்று நடவடிக்கை என்றால் மாதத்தில் இரு முறையேனும் நீங்கள் சுமந்திரனுக்கு கடிதம் எழுத வேண்டியிருக்கும். யாழ்.மேயர் வேட்பாளர் விட யத்தில் தன்னிச்சையாக ஆனோல்ட் தான் என்று அறிவித்தார் சுமந்திரன். கட்சித் தலைவரும் செயலரான தாங்களும் அவ்வாறான நிலைப்பாடு எடு க்கவில்லை என்றீர்கள்.

அப்போதும் உங்கள் இருவரது அறிவிப்பையும் பொருட்படுத்தாமல் மீண்டும் அந்தப் பதவி ஆனோல்ட்டுக்கே என்று அறிவிக்க அவரால் முடிகிறது. அப்படி யானால் கட்சி ஒழுங்கு ஒழுக்காற்று நடவடிக்கையெல்லாம் கேலிக் கூத்தா? தங்களுக்கு சுயகௌரவம் ரோஷ உணர்ச்சியெல்லாம் இருந்த படியால் தான் அந்தக் காலத்தில் மட்டக்களப்பில் இளைஞர் பேரவையை தோற்றுவித்தீர்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொடி முதன் முதலாக கிரானில் தான் ஏற்றப்பட்டது.

அந்த நிகழ்வில் தாங்களும் கலந்து கொண்டிருந்தீர்கள் இன்று என்ன ஆச்சு உங்களுக்கு? ஆட்சேர்ப்பு தொடர்பாக புலிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார் சுமந்திரன். தன்னி ச்சையான இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ளவும் என அவருக்கு நீங்கள் ஏன் கடிதம் அனுப்பவில்லை.?

இது சுமந்திரனின் தனிப்பட்ட கருத்து கட்சியின் நிலைப்பாடு இதுவல்ல. என்றாவது ஒரு அறிக்கைவிட நீங்கள் ஏன் முயலவில்லை சுமந்திரனுக்கு இவ்வாறான வீட்டோ அதிகாரம் கட்சிப் பொதுச்சபையாலோ நிர்வாகக் குழு வாலோ எப்போது வழங்கப்பட்டது?

சில தினங்களிலேயே அருமையான மிருதங்க வித்துவான் கணேசசுந்தரம் கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. அன்று நல்ல பிரியாணிச் சாப்பாடு சாப்பிட்டிருப்பார் சுமந்திரன்.

கட்சித் தலைமை பதவி மாவைக்கு கிடைத்தபடியால் அதை எதிர்பார்த்திருந்த முதல்வர் சகிக்க முடியாமல் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் என தாங்கள் கதாசிரியராக மிளிர்வதை வெளிப்படுத்தியிருந்தீர்கள். ஒரு அரைக்கும் ஆலை அமைத்தால் தங்களது திரிக்கும் திறமை வெளிப்பட்டிருக்கும்.

இன்றைய குழப்பங்களுக்கு காரணம் மாவை முதல்வர் பதவி மீது கண் வைத்திருந்ததும் அது நிறைவேறாமற் போனதும்தான். மாகாண சபைத் தேர்த லுக்கு முன்னதாக மாவையையே முதல்வர் வேட்பாளராக நியமிக்க வேண்டு மென வவுனியாவில் சிலரால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. திரு.சி. வி.கே சிவஞானமும் இவ்வாறான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்.

யாழ்.மாநகர சபைக்கு ஈ.பி.டி.பி. மூலம் தெரிவாகியிருந்த நிஷாந்தன் என்பவர் தனது திடீர் விசுவாசத்தைக் காட்ட முதல்வர் வேட்பாளராக மாவையை நிய மிக்காவிட்டால் தீக்குளிப்பேன் என மிரட்டினார். அவரது நிலைப்பாட்டை மாற்றும் படி எவரும் கேட்டதாகத் தெரியவில்லை.

நிச்சயம் டக்ளசும் தன்பங்குக்கு மண்ணெண்ணையோ, பெற்றோலோ வாங்கி க்கொடுக்கத் தயாராகவே இருந்திருப்பார். எதுவும் நடக்கவில்லை மாவையின் விருப்பத்துக்கு மாறாகத்தான் சி.வி.விக்கினேஸ்வரன் முதல்வர் வேட்பா ளராக நியமிக்கப்பட்டார்.

என்பதே உண்மை. சுமார் ஒரு வருடத்தின் பின் மாவை 06.09.2014 அன்று கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். மாவையைச் சாந்தப்படுத்தவே சம்பந்தன் ஐயாவால் இப் பதவி வழங்கப்பட்டது என்பதுதான் வெளிவராத இரகசியம். மாவையின் உள்ளக்கிடக்கையை அறிந்தபடியால்தான் அடுத்த முதல்வர் மாவையே என்றார் சிறீதரன்.

இதன் மூலம் பாராளுமன்றத்திற்கான கதவை மாவைக்கு அடைத்து விட்டார் அவர். சிங்களவரோடு எங்களைப் போன்றோர் அரசியல் செய்து கொள்கிறோம்; பிரசெல்ஸ் போன்ற இடங்களுக்கு தூதுக்குழு உறுப்பினராகச் செல்கிறோம்:

நீங்கள் வவுனியாவுக்கு அப்பால் போகாமல் இங்கேயே புடுங்குப்பட்டுக் கொண்டிருங்கள் என்று ஆப்பு வைத்துவிட்டார் அவர். ஏற்கனவே வவுனியா வல்வெட்டித்துறை நகரசபைகள் – வலி.தென்மேற்கு வலி.கிழக்கு பிரதேச சபைகளில் ஆளும் கட்சியும் நாமே எதிர்க்கட்சியும் நாமே என்று கட்சியினர் கூத்தாடிக் கொண்டிருந்த போது தமது ஆளுமையை நிரூபிக்க மாவை தவ றிவிட்டார்.

இதனாலேயே இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையே என்ற தீர்மா னத்தை முதல்வர் மாகாண சபையில் கொண்டு வந்ததைத் தொடர்ந்து சும ந்திரனின் பாசமிகு தம்பிகள் ஆடாத ஆட்டமெல்லாமல் ஆடினர். எனவே மாவை இவர்களோடு கிடந்து மாரடிக்கட்டும் என்று முடிவுகட்னார் சிறீதரன். தலைவருக்கு மாவையும் செயலருக்கு தாங்களும் நியமிக்கப்பட்டமை பொருத்தமில்லாதது என்பதை இருவருமே நிரூபித்து விட்டீர்கள்.

தங்கள் இருவருக்கும் மட்டக்களப்பில் அளிக்கப்பட்ட வரவேற்பில் இந்து மற்றும் கத்தோலிக்க மதகுருமார்களே அழைக்கப்பட்டனர். ஒரு முஸ்லிம் மத குரு அழைக்கப்படவில்லை. இது தந்தை செல்வா உருவாக்கிய கட்சி என்பதை இருவருமே மறந்து விட்டீர்கள்.

தங்களின் சகோதரர் முறையான பாலிப்போடி சின்னத்துரை (பாசி அல்லது யோகன்) கவிஞர் காசியானந்தனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளு மாறு தந்தை செல்வாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று புகையிர தம் மூலம் அங்கு சென்றார் தந்தை.

அவரிடம் பாசியும் ராஜ்மோகனும் (தமிழீழ கழுகுகள் படை நிறுவனர்) விழா நிகழ்ச்சி நிரல் அடங்கிய துண்டுப் பிரசுரத்தை வழங்கினர். அதைப் படித்ததும் தந்தையின் முகம் மாறிற்று.

இதில் இராசதுரையின் பெயர் காணப்படவில்லையே ஏன்? என்று கேட்டார். தொடர்ந்து எவரையும் சந்திக்காமல் அடுத்த புகையிரதத்தில் திரும்பிவிட்டார் தந்தை. அவரது கட்சியை நடத்தப் புறப்பட்ட தாங்கள் இருவரும் ஒரு மௌ லவி அங்கு காணப்படவில்லையெனில் என்ன செய்திருக்க வேண்டும்?

குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்தக் காரியம் நடந்திருக்க வேண்டும். தந்தை செல்வா மட்டுமல்ல புலிகளின் பொறுப்பாளர்கள் பலரும் (பரதன் உட்பட) சிக்க லான விடயங்களுக்கு அதேவினாடியில் தீர்வு கண்டிருக்கிறார்கள் என்பது எமது மக்களுக்குத் தெரியும்.

இன்று திடீரென்று உங்களுக்கு முன்னாள் போராளிகள் மீது பாசம் ஏற்பட்டது ஏன்? எல்லாம் கடந்த மாவீரர் நாள் நிகழ்வுகளின் படிப்பினைதான். மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டனர். நீறுபூத்த நெருப்பாகிக் கிடந்த உணர்வுகள் வெளித்தெரிந்தன. இந்த வாக்கு வங்கியைத் தவறவிட்டால் கோவிந்தா என உணர்ந்தீர்கள்.

தமக்கு முடி சூட்டப்படும் எனக் காத்திருந்த சிறீதரன் வியாழேந்திரன் ரவிகரன் போன்றோர் அடங்கிப் போக வேண்டியிருந்தது. தங்கள் நண்பர் வேணுதாஸை அழித்த புளொட் ரெலோவினரை மன்னித்து செங்கலடி ஆரையம்பதி பிரதேச சபைகளை வழங்க உங்களால் முடிகிறது.

ஆனால் புலிகளுக்கு? புலிகளிலும் ஆளுமையுள்ளவர்கள் உள்ளே வந்தால் சுமந்திரன் போன்றோருக்குச் சிக்கல் என்று எண்ணுகிறீர்கள் போலும். பாசி யின் பாதுகாப்புக் கருதி அவரை அரசியலுக்குள் கொண்டுபோக முடிய வில்லை என முன்னர் தாங்கள் சொன்னதாகத் தகவல் ஒன்று உண்டு. இன்று மாவையின் மகனையே திணிக்கப் புறப்பட்டு விட்டீர்கள்.

 கேட்டால் காசியண்ணாவின் பாடலில் ஓரிரு வரிகளைப் பாடிவிட்டு விளக்கம் சொல்வீர்கள். போதுமடா சாமி. தேர்தல் முடிவுகள் தங்கள் கட்சிக்கு ஏற்பட்டு ள்ள சரிவை நிச்சயம் சுட்டிக் காட்டும். தமிழர்களுடைய ஜனநாயகப் போராட்ட வரலாற்றில் மிகவும் உயர்ந்த பட்சமாக இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம். இன்று அதில் ஒரு பகுதியை இழந்து நிற்கிறோம் என்ற மாவையின் ஒப்புதல் வாக்குமூலம் இதனை உணர்த்துகி றது. இனப்படுகொலை சம்பந்தமான தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்த தையிட்டு அவ்வாறு ஓர் அவசியம் இருந்திருந்தால் கூட அது ஏன் தலைமை க்குத் தெரிவித்திருக்கக் கூடாது? எனக் கேட்டிருந்தீர்கள். தலைமை என்ற வகையில் செயலராகிய தாங்களும் அதில் உள்ளடங்குகிறீர்கள்.

இத் தீர்மானத்தை கிழக்கு மாகாண சபையில் கொண்டு வரமுடியாது என்பது வடக்கு முதல்வருக்குத் தெரியும். ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தன்னு டன் தொடர்பு கொள்ளுமாறு கிழக்கு முதல்வர் அறிவித்தார்.

அவரது கருத்தின் படி திரு.தண்டபாணி வெறும் பொம்மை. அதிகாரம் முழு க்கத் தன்னிடமேயுள்ளது என்பதைத் தங்களுக்கு உணர்த்தியுள்ளார். உங்க ளால் கனவில் கூட நினைக்க முடியாததை வடக்கு முதல்வர் செய்துள்ளார். இதில் இன்னொரு விடயமும் உண்டு.

சபை உறுப்பினர்கள் தங்களது சுயபுத்தியில் இத் தீர்மானம் தொடர்பாக முடி வெடுத்தார்கள். நீங்கள் சொன்னமாதிரி நடந்தால் சுமந்திரன் ஆனோல்ட்டைக் கூப்பிட்டு இதைக் குழப்ப உச்சக்கட்டமாக என்னென்ன செய்ய வேண்டுமென கொம்பு சீவி விட்டிருப்பார்.

பசுபதிப்பிள்ளைக்கு உசுப்பேத்திவிட்டு என்னென்ன வடிவத்தில் குழப்பலாம் என ஆலோசனை சொல்லியிருப்பார் சிறீதரன். எப்போதுமே அரசியல் வழியி லும் ஆயுத வழியிலும் அரசுடன் ஒத்துப் போகும் புளொட் உறுப்பினர்கள் என்ன செய்திருப்பார்கள்?

அம்மாச்சி உணவகம் என்று பெயர் வைக்கவே நடுங்கும் புளொட்டினர் முத ல்வரே இத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார் என்ற நம்பிக்கை யில்தான் ஆதரவளித்தார்கள். இனஅழிப்பு என்பது அதிகூடிய நிறுவுதரத்தின் மேல் நிறுவப்பட வேண்டியதொன்று.

போர்க்குற்றம் என்கின்ற வரைவிலக்கணத்திற்குள் நின்று சிறந்த சான்றுகளை முன்வைக்கும் போது சான்றுகளுடைய பெறுமானத்தைக் கருத்தில் கொண்டு இனஅழிப்பு நடைபெற்றது என்பதை நிரூபிக்கும் வகையில் எமது செயற்பா டுகள் அமைய வேண்டுமென சுமந்திரன்-முதல்வர் சந்திப்பு தொடர்பாகக் குறி ப்பிட்டீர்கள்.

அந்த ஆதாரத்தைத் திரட்டும் பணி உங்களுக்கு இல்லையா? பாதிக்கப்பட்ட மக்களோடு-அவர்களின் உணர்வுகளில் இருந்து நீங்கள் அந்நியப்பட்டிருப்ப தையே இது உணர்த்துகிறது. பிரபாகரனது கருத்தொன்று உண்டு. (சொற்கள் அப்படியே இல்லாவிடினும் கருத்து இதுதான் முயற்சி செய்பவன் வெற்றியை அடையக் கூடிய வழிகளைத் தேடுகிறான். முயற்சி செய்யாதவன் தோல்வி க்கான காரணங்களைத் தேட முனைகிறான்.

இவ்வண்ணம்
மட்டுநேசன்