தேர்தல் கடமைகளால் மக்கள் சேவை தாமதமாக கூடாது – ஜனாதிபதி
தேர்தல் செயற்பாடுகளின் காரணமாக அரசாங்க நிறுவனங்களினூடாக மேற்கொள்ளப்படும் நாளாந்த மக்கள் சேவைகள் எந்த வகையிலும் தாமத மாகக் கூடாதென ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன தெரிவித்தார். அமை ச்சுக்களின் செயலாளர்களுடன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவல கத்தில் நடைபெற்ற சந்திப்பில் தெரி வித்துள்ளார். எந்தவொரு அரச நிறுவனத்திடமும் உள்ள சொத்துக்கள் அல்லது வாகனங்களை தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்த இடமளிக்கா திருப்பது அமைச்சுக்களின் செயலாளர்களினது பொறுப்பாகுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய வருடத்தின் அபிவிருத்தி இலக்குகள் மற்றும் திட்டங்களை வருடத்தின் ஆரம்பத்திலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டிய அவசிய த்தை வலியுறுத்திய ஜனாதிபதி, கடந்த வருடம் அமைச்சுக்களுக்கு ஒதுக்க ப்பட்ட நிதி பயன்படுத்தப்படாது மீளவும் திறைசேரிக்கு அனுப்பப்பட்டிருக்கு மானால் அது குறித்து அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடு க்குமாறும் தெரிவித்தார் என, அரசாங்க தகவல் திணைக்களச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அனைத்து அமைச்சுக்களிலும் ஊடகப் பிரிவொன்றை அமைத்து அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்கள் சேவைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியதன் அவ சியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தமது அமைச்சுக்களுக்கான துறைகள் குறித்து வெளிநாடுகளுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்து வது அமைச்சுக்களின் செயலாளர்களது பொறுப்பாகுமென ஜனாதிபதி தெரி வித்துள்ளார்.
அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் வருடாந்த வெளி நாட்டுப் பயணங்கள் குறித்து விதி முறைமையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்தல் மற்றும் அவற்றை பராமரித்தல் தொடர்பாக முறைமை ஒன்றை பின்பற்ற வேண்டி யதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அரசாங்கம் மாறுகின்றபோது வாகனங்கள் இல்லாமல் போகும் நிலமையை இதன் மூலம் நிவர்த்தி ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமெனத் தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சு தொடர்பாக கலந்துரையாடப்பட்ட விடயங்களில் ஜனாதி பதி ஆற்றங்கரை பிரதேசங்கள் அழிவடைவது தொடர்பாக கண்டறிந்து அவ ற்றை தவிர்ப்பதற்கான நடைமுறைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்ப தற்கு விசேட குழுவொன்றை அமைக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.
மகாவலி அபிவிருத்தி அமைச்சும் நீர்ப்பாசன திணைக்களமும் இணைந்து இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி ஆலோசனை வழ ங்கினார்.
நாளுக்குநாள் சனத்தொகை அதிகரித்துவரும் நாடு என்ற வகையில் காணிகள் தொடர்பில் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வெளி ப்படுத்திய ஜனாதிபதி, இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணம் காணிகள் தொடர்பில் உரிய கொள்கைகள் பின்பற்றப்படாமையெனத் தெரிவித்துள்ளார்.