Breaking News

விமலின் கட்சியிலிருந்து இருவர் சுதந்திரக்கட்சிக்கு தாவுகின்றனர்!

தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யி­லுள்ள இரு உறுப்­பி­னர்­கள் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்கு இந்த வாரம் தாவிப் பாய்வதற்குள்ளார்கள். 

இது தொடர்­பில் தற்­போது சுதந்­தி­ரக் கட்­சி­யின் உயர்­பீ­டத்­து­டன் மேற்­படி மாகாண சபை உறுப்­பி­னர்­கள் இரு­வ­ரும் பேச்சு நட த்தி வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஏற்­க­னவே, மகிந்த அணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வன்ச தலை­மை­யி­லான தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் துணைத்­த­லை­வர் வீர­கு­மார திசா­நா­யக்க, அந்­தக் கட்­சி­யின் தேசிய அமைப்­பா­ளர் பியஸ்ரீ விஜே­நா­யக்க, துணைப் பிர­திச் செய­லர் நிமல் பிரே­ம­வன்ஸ ஆகி­யோர் கடந்த வருட இறு­தி­யில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டன் இணைந்­துள்­ள­னர். 

இந்த இழப்பே விம­லின் கட்­சிக்­குப் பேரி­டி­யாக இருக்­கும் நிலை­யில், அந்­தக் கட்­சி­யைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் இரு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளும் இந்த ­வா­ரத்­தில் வெளி­யே­று­வது அடுத்த தேர்­த­லில் தாமரை மொட்­டுக்­குப் பெரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­துமெனத் தெரிவிக்கப்படுகின்றது.