Breaking News

எரிமலை குழம்பை கக்கிவரும் மயோன் எரிமலை!!!

பிலிப்பைன்சின் அல்பே மாகாணத்தில் அமைந்துள்ள மயோன் எரிமலை சீற்றமடைந்து இன்று அதிலிருந்து எரிமலை குழம்பு மற்றும் கடுமையான புகை வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரு வாரங்களாக சீற்றமடை ந்து காணப்படும் மயோன் எரிமலை யில், எதிர்வரும் ஓரிரு தினங்களில் பாரிய வெடிப்பு ஏற்படலாம் என பிலி ப்பைன்சின் எரிமலையியல் மற்றும் புவி அறிவியல் நிறுவனம் எச்சரித்து ள்ளது.


மயோன் எரிமலையை அண்மித்த குறித்த பகுதியானது அபாய வலயமாக பிர கடனப்படுத்தப்பட்டு அங்கிருந்து ஏற்கனவே சுமார் 75,000 பேர்வரை பாதுகாப்பு முகாம்களுக்கு வெளியேறியுள்ளனர். ஆனால், பல விவசாயிகளும், கற்சுர ங்கத் தொழிலாளர்களும், பண்ணையாளர்களும் கட்டளையை மீறி வெளி யேற மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.