Breaking News

மகிந்த கோத்தாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையாம் - ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடு க்குமாறு, பாரிய நிதி மோசடிகள், ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரி த்த ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. 

முன்னைய ஆட்சிக்காலத்திலான  மோசடிகள் குறித்து விசாரிக்க நிய மிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் இணையத்தி லும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐ.ரி.என் எனப்படும் சுயாதீன தொலை க்காட்சி நிறுவனத்தில் நிதி இழப்பை ஏற்படுத்தியமைக்காகவே, மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின் பரப்பு ரைக்காக ஐ.ரி.என் தொலைக்காட்சியை கட்டணமின்றி பயன்படுத்தியதால், 102,158,058 ரூபா இழப்பு ஏற்படுத்தியதாக மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக குற்ற ச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் இது ஒரு குற்றம; எனவே மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆணை க்குழு பரிந்துரைத்துள்ளது. அதேவேளை, இதே சட்டத்தின் கீழ் முன்னாள் பாது காப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடு க்குமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. 

கோத்தாபய ராஜபக்ச, மேஜர் நிசங்க சேனாதிபதி, மேஜர் ஜெனரல் பாலித பெர்னான்டோ, முன்னாள் கடற்படை அதிகாரிகளான சிசிரகுமார கொலம்பகே, மக்சிமஸ் ஜெயரத்ன, ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.