Breaking News

இலங்கையின் பிரபல பொப் இசைப் பாடகர் ஏ.இ.மனோகரன் மறைந்தார்!

பிரபல பொப்பிசை பாடகர் சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ. மனோகரன் தனது 73 ஆவது வயதில் சென்னையில் நேற்று கால மானதாக அவரது உறவினர்கள் தெரி வித்துள்ள னர். ஏ.இ.மனோகரன் புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். பல மொழிப் பாட ல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்தவர். பொப் இசைச் சக்கரவர்த்தி எனப் பாரா ட்டுப் பெற்றவர். 

இவருக்கு இலங்கையில் மட்டுமன்றி உலகமுழுவதிலும் பல ரசிகர்கள் உள்ள னர். இவர் பாடிய “சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிட மாலுகெனாவா...” என்ற பைலா பாடல் நம் நாட்டு சிங்கள மற்றும் தமிழ் இரசிகர்கள் மாத்திர மல்லாது உலகளாவிய ரீதியில் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. 

அத்துடன் அந்தப்பாடலை ஹிந்தி, மலையாளம், பேரர்த்துக்கீஸ் உள்ளி ட்ட பல மொழிகளிலும் பாடி உலக கலைஞர்களின் பாராட்டைப் பெற்ற வர். நீண்டகாலமாகச் சென்னையில் வாழ்ந்து வந்த ஏ.இ.மனோகரன், இந்தி யக் கலைஞர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். யுத்தத்திற்கு முன்ன ரான காலப்பகுதியில் அவர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இடங்களில் மேடைகளில் பொப்பிசைப் பாடல்களை பாடி இளைஞர்களின் மனதில் இட ம்பிடித்தார். இவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்ப டங்களிலே நடித்தும் பாடியும் வந்தார். 

குறிப்பாக, மனோகரன் பாடிய பொப்பிசைப் பாடல்களில் “சின்ன மாமியே உன்ன சின்ன மகள் எங்கே” என்ற பாடல் 1970 களில் இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமாக பாடப்பட்டு வந்தது. 1970, 1980 களில் இலங்கை வானொலியிலும் அவரது பாடல்கள் தினமும் ஒலிபரப்பட்டு வந்தன. 

மனோகரன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தமிழ், இந்தி திரைப்படங்களில் நடி த்துள்ள மனோகர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 'வாடைக்காற்று' 'பாசநிலா' ' புதிய காற்று' ஆகிய பல ஈழத்து தமிழ் திரைப் பட ங்களிலும், 'ஜே ஜே' போன்ற தென்னிந்திய தமிழ் திரைப்படங்களிலும் மனோகரன் நடித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசனுடன் ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ படத்தில் பாடி நடி த்துள்ளார். இவரின் புகழுடல் பொதுமக்கள், கலைஞர்கள் உள்ளிட பலதுறை யினரின் அஞ்சலிக்குப் பின்னர், எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை சென்னையில் தகனம் செய்வதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.