மாகாணசபை முறைமை இலங்கைக்கு தேவையில்லையென – அதாவுல்லா
மாகாணசபை முறைமை இலங்கைக்கு தேவையில்லை என்பதை நிலை நாட்டவே, உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தான் போட்டியிடுவதாக முன்னாள் உள்ளுராட்சி அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெற வுள்ள நிலையில், அம்பாறை – மருத முனை பகுதியில் தேர்தல் பிரசார கூட்டம் சனிக்கிழமை இடம்பெற்ற போது கூட்டத்தில் கலந்து கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவி த்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;
அரசாங்கத்தில் தற்போது பல விடயங்கள் தொடர்பி்ல் தீர்மானங்கள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளன. எனினும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமாயின் தோல்வியே கிடைக்குமென தமிழ் தலைவர்களுக்கு தான் கூறியிருப்பதா கவும் தெரிவித்துள்ளார்.
இந்துக்களும், பௌத்த மக்களும் சிலைகளை வணங்குகின்ற அடிப்படையில், இஸ்லாம் மக்களை விரட்டுவதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்து வரு வதாக மேலும் தெரிவித்துள்ளார்.