முல்லைத்தீவில் 1958 பேர் தபால் மூல வாக்கிற்கு தகுதியானர்கள் !

அத்துடன் ஏனைய தபால் மூல வாக்களிப்பவர்களுக்கு 25 ம், 26 ம் திகதிகளில் வாக்கு பதிவு நடைபெறும் எனவும் இவற்றில் வாக்களிக்க தவறியவர்களுக்கு மாசிமாதம் முதலாம் இரண்டாம் திகதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலக த்தில் தமது வாக்கை பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைக்குமான தேர்தலுக்காக மாவட்டம் முழுவதும் 72 ஆயிரத்து 961 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளதாகவும் இவர்களுக்காக 134 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.
வரும் மாசி மாதம் 10 ம் திகதி காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்காளர்கள் தமது வாக்குகளை பதிவுசெய்ய முடியும் எனவும் வாக்கு என்னும் பணிகள் வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுமென இறுதியாக மாவட்ட செயலகத்துக்கு வாக்குகள் எடுத்து வரப்பட்டு சபைகளுக்கான இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுமெனத் தெரிவி த்துள்ளார்.