Breaking News

முள்ளிவாய்க்காலில் தங்கத்தை தேடி இராணுவத்தினர் !

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தமிழீழ விடு தலைப்புலிகளினால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக தெரிவித்து நேற்று மாலை அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதி யுடன் மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் இரா ணுவம் பொலிஸ் விசேட அதிர டிப்படை கடற்படை ஆகியோர் இணைந்து இந்த அகழ்வு நடவடி க்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலை யில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இப்பணி நடைபெற்றது. தொடர்ந்து அகழ்வு பணிக்கான இயந்தி ரத்தின் அளவு போதாமையினால் பெரிய ரக ஜே.சி.பி இயந்திரத்தை ஒழுங்கு செய்து வருமாறு நீதிபதி பணித்துள்ளார். அத்தோடு தோண்டப்பட்ட இடம் மீண்டும் மூடப்பட்டு பிறிதொரு தினத்தில் இவ் அகழ்வு பணி தொடருமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.