ஜனாதிபதி செயலகமானது பைத்தியக்காரர்களின் கூடாரமாம் - ஜே.வி.பி!
மகிந்த காலத்து ஊழல் மோசடி தொடர்பான விசாரணைக் குழுவால் ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கை தம்மிடம் இல்லையென ஜனாதிபதி செயலக செயலர் தெரிவித்துள்ளார்.
அப்படியாயின் அது ஜனாதிபதி செயலகம் கிடையாது. பைத்தியக்காரர்கள் இரு க்கும் கூடாராமாகும். என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளதுடன் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் பிணைமுறி மற்றும் பெரிய ஊழல் மோசடி தொடர்பான இரு அறிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும்.
அதன்பின் பிரதமருக்கு உரை நிகழ்த்த இடமளித்திருக்க வேண்டும். அறிக்கைகள் தொடர்பான விடயம் தீர்வின்றி இருக்கையில் சபாநாயகர் அதனை முடிக்காமல் இரண்டாவது நிகழ்ச்சி நிரலான பிரதமர் உரைக்கு சென்றமை பெரும் தவறாகும்.
அமர்வுக்கான அறிக்கைகள் இரண்டையும் பெற்றுக்கொள்வதற்கு அதிகாரிகளை அழைத்து விசாரித்து இருக்க வேண்டும். எனினும் தீர்க்க வேண்டிய பிரச்சினையை தட்டிக்கழித்து ரணிலின் உரைக்கு சென்றது பெரும் தவறாகும். இதன் ஊடாக சபை தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது.
எப்படியாவது பிணைமுறி தொடர்பான அறிக்கையை 17 ஆம் திகதி சமர்ப்பிப்பது போன்று முன்னைய ஆட்சியின் பெரிய ஊழல் மோசடி தொடர்பான அறிக்கையையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் – என்றார்.