பிணைமுறி விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு – சம்பந்தன்
ஜனாதிபதி ஆணைக்குழுவின் மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான விசா ரணை அறிக்கையை, விரைந்து பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலை வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.
திறைசேரி பிணைமுறி விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற சர்ச்சையின் மத்தியில் பேசும்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது மட்டுமல்லாது, கடந்த காலத்திலும் நாட்டில் இடம்பெற்ற அனைத்து ஊழல் மோசடிகள் பற்றி யும் விசாரிக்கப்பட்டு, உண்மைகள் கண்டறியப்பட வேண்டுமெனத் தெரிவி த்துள்ளார். இது தொடர்பில், தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி யினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை, கூடிய விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று, பிரதமர் உட்பட கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் பொது இணக்கப்பாடொன்று காணப்பட்டது.
“அது தொடர்பில் எந்த முரண்பாடும் கிடையாது. ஆணைக்குழுவின் அறிக்கை யானது, கூடிய விரைவில் சமர்பிக்கப்பட்டு விவாதத்துக்கு எடுக்கப்பட வேண்டும் என்பதில் நாம் ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து உடன்படு கிறோம். இவ் விடயத்திலும் எக் கருத்து முரண்பாட்டுக்கும் இடமில்லை.
பொது நிதி தொடர்பானதும் நாடும் நாடாளுமன்றமும் கரிசனையுடையது மான விடயமுமாகும். மக்களும் நாடாளுமன்றமும் இவ்விடயத்தில் கொண்டு ள்ள அக்கறையானது, இந்த நாடாளுமன்றத்திலான விவாதம் விரைந்த வொரு சந்தர்ப்பத்தில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பதன் மூலம் இவ் விட யம் எந்த விதத்திலும் திசை திருப்பப்படுவதை நான் ஏற்றுக்கொள்ள வில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “பிணைமுறி விவகாரம் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை மட்டு மல்லாது, பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு வின் அறிக்கையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
“ஆகவே இரு அறிக்கைகளும் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு இரு அறிக்கைகளும் நாடாளுமன்றத்தில் விவாத்திக்கப்பட்டு விடயங்களின் அடி ப்படை வரை செல்ல வேண்டும். அது மட்டுமல்லாது, கடந்த காலத்திலும் அதேபோல், தற்போதும் இந்த நாட்டில் இழைக்கப்பட்ட அனைத்து ஊழல் மோசடிகள் தொடர்பிலும் விசாரிக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
“ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பகிரங்கமாக வெளியிடப்பட்டிருக்காத சந்தர்ப்பங்களும் இந்த நாட்டின் வரலாற்றில் இருந்திருக்கின்றன. பல்வேறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு, அந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அந்த அறிக்கைகள் பகிரங்கமானதாக வெளியிட ப்பட்டிருக்கவில்லை.
“குறைந்தது இந்த அறிக்கையிலுள்ள உள்ளடக்கங்களையாவது வெளியிட்ட மைக்காக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அரசாங்கத்துக்கும் நான் பாராட்டு தெரிவிக்கிறேன். அத்துடன், முழு அறிக்கையையும் வெளியிட்டு, அது தொட ர்பில் விவாதமொன்றை நடத்துமாறும் வலியுறுத்துகிறேன்.
“விவாதத்தைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக நாட்டு மக்கள் மத்தியில் அபிப்பிராயம் ஏற்படுத்தப்படக்கூடாது. மக்களுக்கு விடயங்கள் தெரியப்படு த்தப்பட வேண்டும். ஏனெனில் இது மக்களின் நிதியாகும்.
ஆகவே, அறிக்கை தொடர்பில் இந்த நாடாளுமன்றம் என்ன சொல்ல வேண்டும் என்பதை, மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என மேலும் வலியு றுத்தியுள்ளார்.