Breaking News

கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்க முடியாதாம் - சுவாமிநாதன்

கண்ணை மூடிக்கொண்டு கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மீள் குடி யேற்ற அமைச்சருமான டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மீள்குடியேற்ற அமை ச்சருக்கும் கேப்பாபுலவு மக்களுக்கும் இடையில் வாய் தர்க்கம் மூண்டதாக  தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. முல்லைத்தீவு நாவற்காடு பகுதியில் நேற்று வியாழக்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்ற அமைச்சரு மான டி.எம். சுவாமிநாதனின் தலைமையில் இடம்பெற்றது. 

இதன் போது கேப்பாபுலவு நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமது காணிகளை விரைவில் விடுவிக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சரிடம் கோரி க்கை விடுத்துள்ளனர். எனினும் மக்களது கோரிக்கைகளை நிராகரித்த மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கண்ணை மூடிக்கொண்டா காணி களை விடுவிக்க முடியுமென கேள்வி எழுப்பியுள்ளார். 

கேப்பாபுலவு மக்களுக்கு உரித்தான காணிகளை இராணுவத்தினர் அபகரித்து ள்ள காணிகளில் இருந்து 133.4 ஏக்கர் காணிகள் கடந்த 28 ஆம் திகதி விடுவிக்க ப்பட்டது. 

இதேவேளை, கேப்பாபுலவு மக்களின் ஒரு பகுதி காணி விடுவிக்கப்பட்ட நிலை யில் 104 குடும்பங்களுக்கு உரித்தான 181 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை 328 ஆவது நாளாகவும் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.