Breaking News

வித்தியா படுகொலை வழக்கின் சாட்சிகளில் ஒருவருக்கு சிறை வாசம் !

வித்தியா படுகொலை வழக்கின் சாட்சிகளில் ஒருவரான இலங்கே ஸ்வரனுக்கு 3 மாத சிறைத் தண்ட னை விதித்து ஊர்காவற்றுறை நீதி வான் தீர்ப்பு வழங்கியுள்ளார். குறித்த நபர் மதுபோதையில் வாகனம் செலு த்தியமை வாகன அனுமதிப்பத்திரம், வாகன காப்புறுதிப் பத்திரம், வாகன வரிப்பத்திரம் ஆகியன இல்லாது வாக னம் செலுத்தியமை மற்றும் விபத்து ஏற்படுவதை தடுக்காமை போன்ற 6 குற்ற ச்சாட்டுக்களின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்டதையடுத்து இத்தண்டனை தீர்ப்பு வழங்கப்ப ட்டது. 

இந்நிலையில், குறித்த நபருக்கு 3 மாத சிறைத் தண்டனையும் 18 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்து ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் ஏ.எம். எம். ரியாழ் உத்தரவிட்டுள்ளார். .