Breaking News

வீட்டு சின்னத்தில் வாக்களிப்பதும் யானை சின்னத்தில் வாக்களிப்பதும் ஒன்றே - சுரேஷ் பிரேமசந்திரன்

தற்போது உள்ள அரசியல் சூழலில் மக்கள் வீட்டு சின்னத்தில் வாக்களிப்பதும் தேசிய கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்துக்கு வாக்க ளிப்பதும் ஒன்றுதான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை இயக்கத்தின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன் விவரித்துள்ளார். 


முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வ ரும் உள்ளூராட்சி தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பில் போட்டி யிடும் வேட்பாளர்களுடனான சந்தி ப்பொன்று இன்றைய தினம் ஒட்டு சுட்டான் சிவநகர் கிராமத்தில் நடை பெற்றுள்ளது. 

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரி வித்தார். 

மேலும் தமிழரசுக் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது மக்களிடம் அரச கட்சிகளுக்கு பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் என கூறுகின்றார்கள். 

ஆனால் அவர்களோ தமிழ் மக்களின் ஆணையை பெற்று அதிகாரத்துக்கு வந்து இன்று அந்த பேரினவாத கட்சிகளுடன் இணைந்து ஒத்துப்போகின்றா ர்கள். தமிழ் மக்களின் நலனில் சற்றும் அக்கறை இல்லாது செயற்படுகின்றா ர்கள். 

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் ஆணையை பெற்று, தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்போம் என கூறி பாராளுமன்றம் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று அந்த வாக்குறுதிகளை அனைத்தையும் மறந்து இன்று தமது தனிப்பட்ட நலன்களுக்காக அரசாங்கத்துக்கு விலை போயுள்ளார்கள். இந்த தேர்தலுக்கு பிற்பாடு தெற்கில் மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்ப டுகின்றது. 

எம்மை பொறுத்த வரையில் தென்பகுதியில் மட்டுமல்ல வட, கிழக்கிலும் அவ்வாறான ஒரு மாற்றம் உருவாக வேண்டிய தேவை இருக்கின்றது. தமிழ் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் இந்த அரசால் நிராகரிக்கப்பட்டிருக்கி ன்றது. 

அரசியல் கோரிக்கைகள் முக்கியமாக வடகிழக்கு இணைப்பு என்பது நிரா கரிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்கள் சார்பாக பேசுகின்ற சம்பந்தனோ, சுமந்திரனோ வழிகாட்டுதல் குழுவில் வடகிழக்கு இணைப்பு பற்றி பேச வில்லை என பிரதமர் , ஜனாதிபதி ஆகியோர் தெரிவித்துள்ளார்கள். 

ஆகவே வடகிழக்கு இணைப்பு என்ற அடிப்படை பிரச்சினை அரசாங்கத்தால் ஏற்றுகொள்ளப்படவில்லை அது மாத்திரமல்ல சமஷ்டி என்பதும் ஏற்றுக்கொ ள்ளப்படவில்லை, சுமந்திரன் அடிக்கடி கூறுகின்றார் நானும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இடைக்கால அறிக்கையை வாசிக்காது கருத்து வெளியிடு கின்றோம் என நாம் அதனை முழுமையாக வாசித்துள்ளோம். 

அவருக்கு ஐயமாக இருந்தால் நாமும் அவருடன் நேரடி விவாதங்களுக்கு செல்லத் தயாராக இருக்கின்றோம் . எனவே அவர் இவ்வாறன கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்த வேண்டும். ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் இன்று பௌத்தத்திற்கு முதலிடம் என்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் ஏற்றுக்கொ ள்ளப்பட்டுள்ளது.  

தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் அனைத்தும் அரசால் நிராகரிக்கப்ப ட்டுள்ள இக் கால சூழலில் தமிழரசுக் கட்சிக்கு ஒரு மாற்று வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. 

மாற்றுத் தலைமை என்பது எந்த தேர்தலின் ஊடாக உருவாக வேண்டும். அத ற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும். இப்பொழுது உதயசூரியன் சின்னம் என்பது ஒரு பொது சின்னமாக அதில் கலந்து கொண்டுள்ள ஐந்து அமைப்புக ளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

ஆகவே இந்த உதயசூரியன் சின்னமூடாக ஒரு மாற்றத்தை உருவாக்க நாம் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம். அந்த வகையில் முழுமக்களும் எம க்கான ஆதரவை வழங்க வேண்டும். 

அது மாத்திரமன்றி கடந்த காலத்தில் எமது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஊடாக இரண்டு அரசியல்வாதிகள் தெரிவாகியிருந்தார்கள். ஒரு வர் பாராளுமன்றத்துக்கும் மற்றையவர் மாகாணசபைக்கும் தெரிவாகி யிருந்தார்கள். 

இரண்டு பேருமே தமது எதிர்கால அரசியல் நலன்களுக்காக தமிழரசுக் கட்சி யில் இணைந்துகொண்டார்கள். அதுமாத்திரமன்றி வைத்தியதுறையில் கல்வி கற்று வைத்தியராக பணியாற்றியவர். 

தற்போது ரௌடி தனம் புரிவதும் பெண் வேட்பாளர்களை கடத்துவதும் ஏற்று க்கொள்ள முடியாத செயல், இவ்வாறானவர்கள் எமது கட்சி ஊடாக வந்து சென்றார்கள் என்பது அருவருக்கத்தக்கதாக உள்ளது.  

ஆகவே இவர்கள் தங்களின் தேவைகளுக்காக விடுதலைப்புலிகளின் தலை வரை துணைக்கு அழைப்பதும் அவர் காட்டிய வழியில் நான் செல்கின்றேன் என தெரிவிப்பதும் எல்லோரையும் கேவலப்படுத்தும் செயல். 

இவ்வாறான தவறான அரசியல்வாதிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே சரியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். ஒரு புதிய மற்றம் உரு வாக மக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

நிச்சயமாக இந்த தேர்தலுக்கு பிற்பாடு தமிழரசுக் கட்சியுடன் இருகின்ற ஏனைய கட்சிகளும் எம்மோடு இணைவதை தவிர மாற்று வழியில்லை எனவே அதனை சரியாகப் பயன்படுத்த மக்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுகொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.