முத்தொடர் 6 ஆவது போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி !
பங்களாதேஸ் மற்றும் இலங்கை அணிகள் மோதிய முத்தொடர் 6 ஆவ து போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வென்றுள்ளது.
இலங்கை, ஜிம்பாபே மற்றும் பங்களா தேஸ் அணிகள் மோதும் 7 போட்டிகள் கொண்ட முத்தொடர் போட்டிகள் பங்களாதேஸ் டாக்கா மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற 6 ஆவது ஒருநாள் போட்டியில் பங்களா தேஸ் மற்றும் இலங்கை அணிகள் மோதியுள்ளன.
போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாட களமிறங்கி 24 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதனைத் தொட ர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 11.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 83 ஓட்டங்களை பெற்று 10 விக்கெட்டுக்களால் பங்களாதேஸ் அணியை வென்று ள்ளது.