ஜனாதிபதிக்கு சர்வதேச விருது - சம்மேளனம்
போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு அயராது உழைப்பதை முன்னி ட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டு ள்ளது.
சர்வதேச அளவில் முக்கிய பிரச்சி னையாக உருவெடுத்துள்ள போதைப் பொருளை இல்லாதொழிக்க, நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி போதைப் பொரு ட்களுக்கெதிரான அரச சார்பற்ற நிறு வனங்களின் சர்வதேச சம்மேளனம் அவருக்கு விசேட விருது வழங்கி கௌரவித்துள்ளது. சீனாவின் மெகாவோ கியில் கடந்த நவம்பர் 08ஆம் திகதி நடைபெற்ற போதைப் பொருட்களுக்கெ திரான அரச சார்பற்ற நிறுவனங்களின் சர்வதேச சம்மேளனத்தில், உலகளா விய ரீதியில் நாற்பது நாடுகள் மற்றும் 87 அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்கே ற்றன.
குறித்த விருதை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு வழங்குவதாக அறி விக்கப்பட்டது.
அந்த விருது இன்று (2) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, போதைப் பொருட்களுக்கெதிரான நிறுவனங்களின் ஒன்றிணைந்த சம்மேளனத்தின் தலைவர் வைத்தியர் சரத் எம் சமரகேவினால் இவ்விருது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அமைச்சர் தலதா அதுகோரள, அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பேராசிரியர் ரவீந்தர பிரனாந்து, போதைப்பொருள் ஒழிப்பு ஜனா திபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த கித்தலவ ஆராச்சி உள்ளி ட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.