விடுதலைப் புலிகளை விட ஜே.வி.பி யினர் கொடூரமானவர்கள் என - மகிந்த
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட ஜே.வி.பியினர் மிகவும் மோச மானவர்கள் என ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க த்தினர் ஒருபோதும் செய்யாத செய லான ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படையினரின் குடும்ப உறுப்பி னர்களை ஜே.வி.பி யினர் படுகொலை செய்ததாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜே.வி.பி யினரை யும், நாட்டின் பிரதான எதிர்கட்சியான இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் கடுமையாக சாடி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மஹிந்த இவ்வாறு விவரித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க த்தினர் ஒருபோதும் செய்யாத செய லான ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படையினரின் குடும்ப உறுப்பி னர்களை ஜே.வி.பி யினர் படுகொலை செய்ததாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜே.வி.பி யினரை யும், நாட்டின் பிரதான எதிர்கட்சியான இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் கடுமையாக சாடி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மஹிந்த இவ்வாறு விவரித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் தற்போது நல்லாட்சி அரசாங்கமொன்று ஆட்சியில் இருப்பது போல் நல்லாட்சிக்கான எதிர்கட்சியொன்றும் இருப்பதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேபோல் மக்களுக்காக குரல் கொடுப்பதாக பெருமிதம் வெளியிட்டுவரும் ஜே.வி.பி யினரும் அரசாங்கத்தின் புதிய தேர்தல் முறைமைக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் பிரசாரம் செய்துள்ளதாகவும் மஹிந்த குற்றம் சுமத்தியு ள்ளார்.
மறுமுனையில் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து வருடங்களில் இரு ந்து ஆறு வருடங்களாக அதிகரித்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது நாட்டின் பிரதான எதிர்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மற்று மொரு எதிர்கட்சியான ஜே.வி.பி யும் அதற்கு எதிராக குரல்கொடுக்காதது மாத்திரமன்றி உச்ச நீதிமன்றிலும் முன்னலையாகாது இருந்ததன் மூலம் அவ ர்களும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு பகிரங்கமாக துணை போகின்றார்கள் என்பதை நிரூபித்துள்ளதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டும் ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐம்பது பேரைக் கொண்டிருக்கும் கூட்டு எதிர்கட்சியினரை பிரதான எதிர்கட்சியாக அங்கீகரிக்காது அவரும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்கட்சித் தலைவர் பதவியை வழங்கிய தன் மூலம் இதனை வெற்றி கரமாக நிறைவேற்றியிருப்பதாகவும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாடா ளுமன்றில் தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் கூட்டு எதிர்கட்சி யினரை நாட்டின் பிரதான எதிர்கட்சியாக அங்கீகரிக்காது தமக்கு சார்பான ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அங்கீகரித்து ஜனநாயக த்தின் அடிப்படை மரபுகளையே குழிதோண்டி புதைத்து விட்டதாகவும் மஹி ந்த குற்றம் சுமத்தியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறிய நாள் முதல் ஜே.வி.பி இனருக்கு முன்னுரிமை கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ள மஹிந்த அதனா லேயே ஜே.வி.பி யினர் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அனைத்தையும் நியா யப்படுத்தியதாகவும் நாட்டின் ஆட்சியை முழுமையாக குழப்பி ஆட்சி அதிகா ரத்தை கைப்பற்றுவதே 1971 ஆம் ஆண்டு முதல் ஜே.வி.பி இன் நோக்கமாக இருந்து வந்துள்ளதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
1971 ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை பிடிக்க முற்ப ட்டதன் மூலம் ஜே.வி.பி யினர் 10 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களை பலிகொடுத்தததுடன் 1987 ஆம் ஆண்டு முதல் 89 ஆம் ஆண்டு வரையான கால ப்பகுதியில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தின் போது 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை பலி கொடுத்ததாகவும் மஹிந்த தெரிவித்தார்.
அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக 1988 ஆம் ஆண்டு ஒட்டு மொத்த இராணுவமும் வடமராட்சி படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தெற்கில் ஜே.வி.பி யினர் இராணுவம் உட்பட அரச படையினரை தொட ர்ச்சியாக கொன்றதுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் கொடூரமாக படுகொலை செய்ததாகவும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான கொடூரங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் ஈடுபட வில்லையெனச் சுட்டிக்காட்டியுள்ள மஹிந்த ராஜபக்ச நாட்டிற்கும் படையின ருக்கும் எதிராக மிகவும் மோசமான கொடூரங்களை கட்டவிழ்த்துவிட்டு நாட்டி ற்கு பாரிய துரோகத்தை இழைத்தவர்கள் ஜே.வி.பி யினர் என்பதை மறந்து விடலாகாது எனத் தெரிவித்துள்ளார்.