அமைச்சரவையை வழி நடத்த முடியாத மைத்திரி நாட்டை வழி நடத்துவாரா.?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தனது அமைச்சரவையையே வழிநடத்த முடியவில்லை. இவ்வாறான நிலையில் அவரால் எவ்வாறு நாட்டை வழிநடத்த முடியுமென ஸ்ரீல ங்கா பொதுஜன பெரமுனவின் தலை வர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பினார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் தற்போது இடம்பெறும் நிகழ்வுகளை நோக்கும் போது விநோதமாக உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
நாட்டில் தற்போது இடம்பெறும் நிகழ்வுகளை நோக்கும் போது விநோதமாக உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
அவ்வாறான குற்றச்சாட்டுகளின் பின்னணியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இல்லையென்றும் கூறமுடியாது.
நல்லிணக்க அரசாங்கம் எனக் குறிப்பிடுகின்றனர். எனினும் அமைச்சரவைக்குள்கூட நல்லிணக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.
அமைச்சரவையின் தலைவராக ஜனாதிபதி உள்ளார். ஆயினும் அவரால் அமைச்சரவையை கட்டுப்படுத்த முடியவில்லை. அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து அவர் இடைநடுவில் வெளிநடப்புச் செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜையாவார்.
இவ்வாறான நிலையில் சிங்கப்பூர் பிரதமர் விரைவில் இலங்கைக்கு வருகைதரவுள்ளார். எனவே அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து அவரை நாட்டின் நீதித்துறையின் முன்னிலையில் ஆஜர்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சிங்கப்பூர் பிரதமரிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்.
எனினும் அரசாங்கம் அதனைச் செய்யப்போவதில்லை.
எனவே ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும் பதவி வகிக்கும் வரையில் மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய வர்களுக்கு தண்டனை வழங்கப்போவதில்லை.
எனினும் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் குறித்த மோசடியில் சம்ம ந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படுமென மேலும் தெரிவித்தார்.