“பிரதமர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவதாக”- அமைச்சர் தலதா
பிணைமுறி விவகாரத்தில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறி க்கையில் செய்யப்பட்டுள்ள சிபாரிசுகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவ ர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லையென நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்ததுடன் இவ் வழ க்கு விசாரணைகள் துரித கதியில் நடத்தப்படுமெனத் தெரிவித்தார்.
பிணைமுறி விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்ப ட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், தார்மீக ரீதியில் தாம் பதவி விலகவும் தயாராக இருப்பதாக தெரிவித்த அமைச்சர், குற்றச்சாட்டுக்களை யார் மீதும் எவர் வேண்டுமானாலும் சுமத்தலாம் என்றாலும் அவை நிரூபிக்க ப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.