மாலையில் தாக்குதல் ; காலையில் மரணம் !
தகராறு ஒன்றையடுத்து நேற்று மாலை தாக்குதலுக்கு இலக்கான நான்கு குழ ந்தைகளின் தந்தை, இன்று (2) காலை உறக்கத்திலேயே உயிரிழப்பு பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மகாவெவ - கல் அமுன பகுதியைச் சேர்ந்த 56 வயது நிறைந்த இந்த நபர், நேற்று மாலை தனது வீட்டின் முன்பு றம் உள்ள பிரதான வீதி வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சிலர் அவரு டன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன் தடியால் அவரை பலமாகத் தாக்கி யதாகவும் கடுமையான உட்காயங்களுக்கு உள்ளான அவர் வீடு திரும்பிய துடன் நடந்தவற்றை வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு, தூக்கம் வருவதாகக் கூறி பாயை விரித்துப்படுத்தவர் இரவு உணவையும் உட்கொள்ளவில்லை.
தேநீர் கொடுப்பதற்காக இன்று காலை அவரை எழுப்பியபோதே அவர் மர ணித்து விட்டதை குடும்பத்தினர் தெரிந்துள்ளனர். இவை தொடர்பான விசார ணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.