அரியாலை இளைஞன் கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு மறியல் நீடிப்பு!
யாழ்ப்பாணத்தின், அரியாலை மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின், சந்தேக நபர்களான சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரின் விளக்க மறியல், எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோ ட்டம், வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில், 24 வயதுடைய டொன் பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயி ரிழந்தார். இளைஞர் மீது மேற்கொ ள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. இந் நிலையில், இக் கொலைச் சம்பவத்துடன் தொட ர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரி உட்பட, இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் கட்டளையின் பிர காரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, சந்தேகநபர்கள் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் இன்று (23.01.2018) முற்ப டுத்தப்பட்டனர்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தொடர்வதாக, மன்றுக்கு அறிவிக்கப்பட்டது. அதனால் சந்தேக நபர்கள் இருவரையும் பெப்ரவரி 6ஆம் திகதி வரையும், விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் கட்டளையிட்டு ள்ளார்.