கடமைகளை பொறுப்பேற்றார் இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே !
சட்டம், ஒழுங்கு மற்றும் பெருந்தெருக்கல் இராஜாங்க அமைச்சராக அண்மை யில் நியமனம் பெற்றுக்கொண்ட பியசேன கமகே இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீத்தா குமாரசிங்கவின் ஆசனத்திற்கு இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே அண்மையில் நியமிக்கப்பட்டார்.
இரட்டை பிரஜாவுரிமையை கொண்டவர் பட்டியலில் கீத்தா குமாரசிங்க இடம் பிடி த்தமையால் அதற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், இர ட்டை பிரஜாவுரிமையை கொண்டவர் இலங்கை நாடாளுமன்றத்தில் உறு ப்பினர் பதவியை வகிக்க முடியாதென்ற அதிரடி தீர்ப்பை தெரிவித்திருந்தது.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்புரிமையை கீத்தா குமாரசிங்க இழந்தார். அவருக்கு அடுத்தபடியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் காலி மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த பியசேன கமகேவுக்கு நாடாளு மன்ற உறுப்பினர் பதவி கிட்டியது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பியசேன கமகே வுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.