முதல்வருக்கு எதிராக பேருந்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் - டெனீஸ்வரன்
வட இலங்கை அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பின் பின்னணியில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் இருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதியதாக பல இலட்சம் ரூபாய்கள் நிதி செலவில் கட்டப்பட்ட வவுனியா புதிய பேருந்து நிலையத்தினை செய ற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்ப ட்டு வந்த முயற்சிகள் தொடர்ந்தும் தடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மூடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிக்கவேண்டுமென வடமா காண முதலமைச்சரும், மாகாண போக்குவரத்து அமைச்சருமான சீ.வி. விக்னேஷ்வரன் உத்தர விட்டதை தொடர்ந்து இ.போ.ச ஊழியர்கள் பணி பகி ஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளார்கள்.
இதன் பின்னணியில் முதலமைச்சருக்கு எதிரான தமிழ்த் தேசிய கூட்டமை ப்பின் உறுப்பினர்கள் சிலர் இருப்பதாகவும் பணிப் புறக்கணிப்பை நடாத்தி வரும் வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கிருஸ்ணன் புவி தெரிவிக்கையில்........
இ.போ.ச உழியர்களின் பணிப்புறக்கணிப்பின் பின்னணியில் வடமாகாண முத லமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரனுக்கு எதிரான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருப்பது உண்மையான விடயமாகும்.
முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனு க்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலை யில் அவரை வீழ்த்த வேண்டும் என்ப தற்காக, தமிழ்த்தேசிய கூட்டமை ப்பின் உறுப்பினர்கள் சிலர் பகிஷ்கரி ப்புக்கு பின்னால் இருந்து நடத்து வதாக மக்கள் மத்தியில் கருத்து உள்ளது.
அதற்கு இயைந்தால்போல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு ப்பினர்கள் சிலர் இப் பணி பகிஷ்கரிப்பின் பின்னால் இருப்பது உண்மையே என தெரிவித்துள்ளார்.
இதனிடையே முன்னாள் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் இச் சம்பவத்தின் பின்னால் இருப்பதாக பெயர் குறிப்பிட விரு ம்பாத இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு முதல்வரால் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அவரைப் பழிவாங்கு வதற்காகவே டெனீஸ்வரன் இவ்வாறு செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.