Breaking News

ஹரிஷ் கல்யாண் ஜூலியை பற்றி இப்படி சொல்ல காரணம் என்ன..?

2017 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிக அளவில் பேசப்பட்ட தொலைக்காட்சி நிக ழ்ச்சி என்றால் அது பிரபல தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான். 

இந் நிகழ்ச்சியில் பல பிரபலங்களை ஒன்றிணைத்து ஒரே வீட்டில் விட்டு அவர்களின் வாழ்வை அப்படியே மக்களுக்கு ஒளிபரப்பு செய்தார்கள். அந்த வகையில் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. 

சில பிரபலங்கள் செய்த நியாயமற்ற செயல்களால் அந்த சில பிரபலங்கள் மட்டும் மக்களின் வெறுப்பை சம்பாரித்தார்கள். மேலும், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனைவரும் தற்போது பிஸியாக நடித்து வருகிறா ர்கள். 

அந்த வகையில், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடிக்கிறார்கள். இந்த நிலையில், ஒரு பேட்டியில் ஹரிஷ் கல்யாணிடம் இப் படத்தில் ரைசா நடிக்காமல் ஜூலி கமிட்டாகியிருந்தால் நீங்கள் அவருக்கு ஹீரோவாக நடிக்க சம்மதித்திருப்பீர்களா எனக் கேட்டபோது, நடிக்கமாட்டேன் என்று சொல்ல தய ங்கி அழகாக மழுப்பிவிட்டார் ஹரிஷ். 

 வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.