கருணா வெளிநாடு செல்வதற்கான தடையை நீக்கியது கொழும்பு பிரதான நீதிமன்று!
விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) வெளிநாட்டுப் பயணங்களுக்கு விதி க்கப்பட்டிருந்த தடையை நீக்க, கொழும்பு பிரதான நீதிமன்று நீதவான் லால் ரணசிங்க பண்டார, நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் அடிப்படையில், கருணா வுக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத ஜீப் வண்டியை, முறை யற்ற விதத்தில் பயன்படுத்திய குற்ற ச்சாட்டின் பேரில், அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய வழ க்கு, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நீக்கப்பட்ட நிலையில், கரு ணாவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீக்குமாறு, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நீதி மன்றத்தில் விடுக்கப்பட்டிருந்த கோரி க்கைக்கு அமையவே, மேற்படி பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.