மூன்று வருடமாகியும் நீதி கிடைக்கவில்லை. சுனில் ஹந்துநெத்தி விசனம் (காணொளி)
ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடத்திற்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும், படுகொலைகளை அரங்கே ற்றியவர்களுக்கு இதுவரை தண்டனை வழங்கப்படவில்லையென ஜே.வி.பி விசனம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்சவை வீட்டிற்கு அனுப்பி ரணில் – மைத்திரி அரசாங்கத்தை உருவா க்கிய மக்களுக்கே இன்று தோல்வி ஏற்பட்டிருப்பதாக ஜே.வி.பியின் நாடா ளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்து நெத்தி தெரிவித்தார்.
மாத்தறை – தெனியாய பிரதேசத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்ட த்தில் கலந்துகொண்ட அவர் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாக விமர்சித்தார்.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி “ராஜபக்ச குடும்பம் வெளியேற்றப்பட்டு மூன்று வருடங்களாகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த நாளாகும்.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி “ராஜபக்ச குடும்பம் வெளியேற்றப்பட்டு மூன்று வருடங்களாகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த நாளாகும்.
ரணில் – மைத்திரி அரசாங்கம் ஆட்சிக்குவந்து என்ன கூறியது? ராஜபக்சவின் ஆட்சி முடிவுறுத்தப்பட்டு நல்லாட்சி கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார்கள் திருடர்களை கைது செய்வோம், நாட்டிலிருந்து வெளியேறாதபடி விமான நிலையத்தை மூடுவோமென ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆனால் அதிகாலை மத்திய வங்கியில் கொள்ளையிட்டார்கள்.
ஊடக வியலா ளர்கள் படுகொலை, கடத்தப்பட்டார்கள். போத்தல ஜயந்த கடத்திச்செல்லப்ப ட்டு கை, கால்களை உடைத்தார்கள்.
லசந்த விக்கிரமதுங்க படுகொலையானார். அவரது உடலும் வெளியில் எடு க்கப்பட்டது. மூன்று வருடங்களாகின. குழி தோண்டப்பட்டதே மிகுதி. தாஜு டீன் கொலை செய்யப்பட்டார். விபத்தில் அல்ல, கடத்திச் சென்றே படு கொலை செய்யப்பட்டதாக பகுப்பாய்வு அறிக்கை கூறியது. ரத்துபஸ்வல மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆனால் நீதி கிடைக்கவில்லை.
ராஜபக்சவை தோற்கடித்த மக்களுக்கே இன்று தோல்வி ஏற்பட்டுள்ளது. அன்றும், இன்றும் தேங்காய், அரிசி விலைகள் உயர்ந்து காணப்படுகின்றன. அன்று மஹிந்தவுக்கு திருடன் எனக்கூறியவர்கள் இன்று ரணிலை திருடன் என அழைக்கின்றனர்.
ஒன்றிணைந்த எதிரணி அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்கிறது. மஹிந்த ராஜ பக்ச இன்றுவரை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மீது மூன்று வருட ங்களிலும் எதிராக வாக்களிக்கவே இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.