அரசாங்கத்துக்கு எதிராக மஹிந்த சவால்.!
நான் ஆட்சியில் இருக்கையில் பெற ப்பட்ட கடன் தொகையை விட இவ ர்கள் சர்வதேச நாடுகளிடம் அதிக கடன் தொகையை பெற்றுள்ளனர். ஆனால் பெற்ற கடனுக்கேற்ற வேலைத்திட்டம் இல்லை. ஆனால் என்னால் இப்போதும் எனது அரசா ங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களுக்களை பட்டிய லிட்டு காட்ட முடியும். ஆட்சியிலுள்ள அரசாங்கத்திற்கு முடியுமா? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வியை தொடுத்துள்ளார்.
பதவி ஆசையில் பதவிக் காலத்தை 6 ஆண்டுகளாக்க ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன முயற்சித்தார். எனினும் அவரது ஆசை நிறைவேறவில்லை. 5 ஆண்டுகள் மாத்திரமே ஜனாதிபதி பதவி வகிக்க முடியுமென தீர்ப்பு அறிவிக்க ப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி குழப்பத்தில் உள்ளார்.
பதவியை தக்க வைத்துக் கொள்ள முடியாது போனதால் கோபத்தை என் மீது காட்டுகின்றார். அதனால் எந்தப் பயனமுமில்லை. எனக்கும் எந்த பாதிப்பும் இல்லையென மேலும் பலாங்கொடையில் நேற்றைய தினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.