சிங்கப்பூர் பிரதமர் ஜனாதிபதியை சந்தித்தார் ; உடன்படிக்கையிலும் கைச்சாத்து.!
இலங்கைக்கு விஜயமாகியுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லுங்க்கிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இச் சந்திப்பு இடம்பெற்றது.
சிங்கப்பூர் பிரதமரை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்ற பின் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு தரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படி க்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டது.
அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமர விக்கிரம சிங்கப்பூர் கைத்தொ ழில் வர்த்தக அமைச்சர் எஸ். ஈஸ்வ ரன் ஆகியோர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட னர். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கப்பூர் பிரதமர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உடனிருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்.
சிங்கப்பூர் பிரதமர் ஒருவர் 13 ஆண்டுகளுக்கு பின் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.