Breaking News

தொடரிலிருந்து விலகினார் மெத்யூஸ் - அணித்தலைமையில் மீண்டும் மாற்றம்

பங்களாதேஷில் இடம்பெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று வெள்ளிக்கிழமை பங்களாதேஸ் மற்றும் ஸ்ரீலங்கா அணிகள் மோதவுள்ளன.

இப் போட்டிக்கான ஸ்ரீலங்கா அணிக்கு டினேஷ் சந்திமல் தலைமை தாங்கு வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா அணித்தலைவராக மீண்டும் பதவியேற்ற அஞ்சலோ மெத்தியூஸ், காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து டினேஷ் சந்தி மல் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, அஞ்சலோ மெத்தியூஸுக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல அணியில் இணைக்கப்பட்டு ள்ளார். பங்களாதேஷ், சிம்பாபே மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய அணிகள் இந்த முத்த ரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் பங்களாதேஸ் மற்றும் சிம்பாபே அணிகள் தலா ஒவ்வொரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், ஸ்ரீலங்கா அணிக்கு இன்று இடம்பெற வுள்ள இப்போட்டி மிக முக்கியமானதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.