பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவிற்கு நன்றி தெரிவிப்பு - ரணில்!
மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பில் கடந்த 10 மாதங்களாக விசார ணையை முன்னெடுத்த விசாரணை ஆணைக்குழுவுக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனில் ஹந்துனெத்தியின் தலைமை யின் கீழ் கோப் குழு ஊடாக முன்னெ டுக்கப்பட்ட பிணைமுறி விவகார அறி க்கையானது 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமரின் அறிவுரைக்கமைய சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டு ள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் விரிவாகி யுள்ளது. அதற்கமைய, இந்த மோசடி தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு 2016ஆம் ஆண்டு பிரதமராலும், இந்த வருடம் ஜனவரி மாதம் ஜனா திபதியாலும் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சியின் தேசிய அரசாங்கம் ஜனநாயகத்தை மற்றும் சட்டத்தை மதிக்கும் செயற்பாடு களை இதன்மூலம் மீண்டும் உறுதி செய்ய எம்மால் முடிந்துள்ளது.
இனி சட்டமா அதிபர் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்குமென எதிர்பா ர்க்கப்படுகின்றதெனவும், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளதுடன், ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளமைக்கு அமைய 2008 ஆம் ஆண்டிலிருந்து ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் உரிய விசாரணைகள் நடாத்தப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றமையே தேசிய அரசா ங்கத்தின் நோக்கமென பிரதமர் அலுவலகம் அறிக்கை விடுத்துள்ளது.