மூன்றாவது தொடரில் இந்தியா அபார வெற்றி !
இந்தியா விசாகபட்டிணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி ஈட்டியுள்ளது.
இதன்படி இந்தியா இலங்கை அணி கள் மோதியுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட ஷரில் ஏற்க னவே நடைபெற்ற 2 போட்டிகளில் இலங்கை அணி முதல் போட்டியி லும் இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்றைய தினம் மதியம் 1.30 மணியளவில் வெற்றியை தீர்மா னிக்கும் போட்டி ஆரம்பமாகியது. இந்நிலையில் முதலில் துடுப்பாட கள மிற ங்கிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களை பெற்றுள்ளது. போட்டியில் தரங்கா 95 ஓட்டங்களை இலங்கை அணி சார்பில் கூடுதலாக பெற்றிருந்தார்.
இதனைத்தொடர்ந்து 216 ஓட்டங்களை பெற்றால்; வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 32.1 ஓவர்களில் 216 ஓட்டங்களை பெற்று தொடரை கைப்;பற்றியுள்ளது.போட்டியில் இந்திய அணி சார்பில் தவான் 100 ஓட்ட ங்களை பெற்றிருந்தார்.
இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2ற்கு1 என்ற ரீதியில் வெற்றி கொண்டு சொந்த மண்ணில் இலங்கை அணியுடனான தொடரை தோற்றதில்லை என்ற பெருமையினையும் தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்த க்கது.