Breaking News

சுறா மீன் கடித்து பெண்ணொருவர் பலி - அமெரிக்காவில் !

கடலில், விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் சுறா மீன் கடித்து பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நிக ழ்ந்துள்ளது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வந்த, ரோஹினா பண்டாரி என்பவர், 49 வயதான, இந்திய வம்சா வளி பெண்ணாவார். கோஸ்டாரிகா விலுள்ள கடலில், 'ஸ்கூபா டைவிங்' எனப்படும் ஆழ்கடல் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட சென்ற 18 பேர் குழுவில், ரோஹினா பண்டாரி இடம் பெற்றிருந்தார். ஆழ்கடலில் பயிற்சியில்  ஈடுபட்ட போது, 'டைகர் ஷார்க்' எனப்படும், கொடிய வகை சுறாக்கள் ரோஹினாவில் கால்களை கடித்து துண்டித்தன. அபாய நிலையில் மீட்கப்பட்ட ரோஹினா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

ரோஹினாவுடன், ஆழ்கடலில் பயிற்சியில் ஈடுபட்ட பயிற்சியாளர் ஒருவரை யும் சுறாக்கள் கடித்தன. இருப்பினும் பெரியளவில் காயம் ஏற்படாமல் அவர் உயிர் தப்பியுள்ளார்.