விஷால் படை துணையாக அமையுமென நம்பிக்கை - தினகரன்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டு வாடாவை தடுக்க நடிகர் விஷா லில் படை துணையாக அமையுமென தினகரன் தெரிவித்துள்ளார்.
திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து விட்டு தற்போது தீவிர வாக்கு சேகரி ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எவரும் எதிர்பார்காத சூழ்நிலையில் நடிகர் விஷால் ஆர். கே.நகர் தொகுதி யில் போட்டியிடப்போவதாக செய்தி கள் வெளியானது. இதனை விஷால் தரப்பும் உறுதி வழங்கி தற்போது தேர்தல் களத்திற்கு தயாராகி உள்ளனர். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் நடிகர் விஷால் தனக்கு சிறந்த நண்பர் எனவும் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு பின்னணி நான் இருப்பதாக கூறப்படுவது உண்மை அல்ல எனத் தெரிவித்துள்ளார்.