நேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே திட்டமாம் - ஜனாதிபதி !
ஊழல் மோசடிகள் அற்ற தூய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பும் பய ணத்தில் கட்சி, நிறம் அல்லது குடும்ப உறவு கவனத்திற் கொள்ளப்படமாட்டா தென ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை யிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியுடன் இம்முறை தேர்தலு க்காக இணைந்து கொண்டுள்ள கட்சிக ளின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'சுத ந்திரத்தின் உடன்படிக்கையை வெளி யிட்டு வைத்து உரையாற்றுகையில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி இவ்வாறு தெரி வித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியுடன் இணைந்துள்ள 31 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதி நிதிகளின் பங்கு பற்றுதலுடன் 'சுதந்திரத்தின் உட ன்படிக்கை' வெளியிட்டுவைக்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று முற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிகழ்ந்துள்ளது.
ஊழல் மோசடியில்லாத தூய ஆட்சிக்கான ‘சுதந்திரத்தின் உடன்படிக்கை’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதி நிதி களை பௌத்த பிக்குகளிடம் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கையளித்து அங்கு கூடியி ருந்தவர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
நாட்டையும் மக்களையும் நேசிக்கும், ஊழல், மோசடி வீண்விரயம் போன்ற வற்றிற்கு ஒரு போதும் தலைசாய்க்காத நேர்மையான அரசியல் தலை முறையை உருவாக்குவதே இம்முறை உள்ளுராட்சித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்பார்ப்பு.
இதனால் நேர்மையான மக்கள் சார்பு அரசியல் இயக்கத்திற்கு பொருத்தமான வர்களை தெரிவு செய்து எதிர்காலத்தில் சிறந்த அரசாங்கத்தை கட்டியெழுப்பு வதற்கான வாயிலை இத் தேர்தலின் மூலம் அடையாளப்படுத்த வேண்டும்.
அரசியல் செய்யும் எந்த ஒருவருக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருக்க முடி யாது. அவர்களிடம் இருக்க வேண்டியது தேசத்தினதும் மக்களினதும் எதிர்கா லத்திற்கான பொது நிகழ்ச்சி நிரலாகும்.
அதனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியால் வெளியிடப்பட்ட ‘சுதந்தி ரத்தின் உடன்படிக்கை’ நாட்டி னதும் தேசத்தினதும் இன்றிருக்கின்ற மற்றும் நாளை பிறக்கவிருக்கின்ற தலைமுறையின் எதிர்காலத்திற்கான உடன்படி க்கையாகும்.
இந் நிகழ்வில் மேலும் உரையாற்றிய மைத்ரிபால சிறிசேன, தேர்தல் சட்ட திட்டங்களை மதித்து வன்முறையற்ற, முன்மாதிரியான தேர்தலுக்கு அனை வரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
இதனையடுத்து சுதந்திரத்தின் உடன்படிக்கை குறித்த உறுதிமொழி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச்செயலாளர் மகிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்டதுடன், அனைவரும் இணைந்து அதற்கான உறுதி மொழி யை எடுத்துக் கொண்டனர்.