யானைகளின் அச்சுறுத்தல் : 8 வாக்கெண்ணும் நிலையங்களை மாற்ற ஏற்பாடு- மட்டக்களப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளின் அச்சுறுத்தலுள்ள 8 வாக்கெ ண்ணும் நிலையங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியை கோரியுள்ளதாக மட்டக்களப்பு மாவ ட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவிப்பு.
புதன்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் மேற்கண்டவாறு தெரி வித்தார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான எம். உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 457 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்கெடுப்பு நிலையங்களிலேயே வாக்கெண்ணும் நடவடிக்கைகளும் இடம்பெறவுள்ளன.
வாக்கெடுப்பு நிலையங்கள் வாக்கெண்ணும் நிலையங்களாகவும் செயற்படவுள்ளன.
தேர்தல் முடிந்தவுடனேயே வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகி வட்டார த்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர் அறிவிக்கப்படுவார்.
பின்னர் ஒவ்வொரு வட்டாரமாக பெற்ற வாக்குகள் எமது ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு அங்கு வைத்து நாம் விகிதாசாரத்தை கணக்கிட்டு விகிதாசார உறுப்பினர்களை சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு தெரிவிப்போம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பிரதேசத்திலுள்ள 8 வாக்கெ ண்ணும் நிலையங்கள் யானைகளின் அச்சுறுத்தலுள்ள நிலையங்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையங்களில் மாலை 6 மணிக்கு பின்னர் வாக்கெண்ணுவதற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். இதனால் நாம் அந்த வாக்கெண்ணும் நிலையங்களை வேறிடத்திற்கு மாற்றுவதற்கு, தேர்தல் ஆணைக்குழுவிடம் அனுமதியை கோரியுள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 389,582 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 144 வட்டார ங்கள் உள்ளன. அத்தோடு கோறளைப்பற்று வடக்கிலும், களுவாஞ்சிக்குடியி லும் இரட்டை வட்டாரங்கள் உள்ளன.
இதனையும் சேர்த்து வட்டாரங்களில் இருந்து 146 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் விகிதாசாரத்தையும் சேர்த்து மொத்தமாக 238 உள்ளூ ராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இத் தேர்தலை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு ஊடகவியலாளர்களின் ஒத்து ழைப்பும் முக்கியமானதாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.