திடீர் சுகயீனம்; இரா. சம்பந்தன் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக !
எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சுகயீனம் கார ணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டி ருக்கையில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக எதிர்கட்சித் தலைவர் வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள் ளார்.
தற்போது அவரது உடல்நிலை வழ மைக்குத் திரும்பி வருவதாக வைத்திய சாலையில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.