48 மணிநேர காத்திருப்பு போராட்டம் இன்று மாலையுடன் நிறைவெய்தப்படும் !
சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள 48 மணிநேர காத்திருப்பு போராட்டம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது.
தமிழக அரசின் ஏனைய துறை ஊழி யர்களுக்கு இணையாக போக்குவர த்து தொழிலாளர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
13ஆவது சம்ப ள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த ப்பட வேண்டுமென பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி போக்குவர த்து தொழிலாளர்கள் 48 மணி நேரம் காத்திருப்பு போராட்டத்தை நேற்றைய தினம் ஆரம்பித்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனி ஸ்டு, மறு மலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இதன்போது, வருங்கால வைப்புநிதி, எல்.ஐ.சி, கூட்டுறவு நாணய சங்க பிடி த்தம் என போக்குவரத்து தொழிலாளர்களிடம் அறவிட்ட பணத்தில் இருந்து 7 ஆயிரம் கோடி ரூபாவை அரசாங்கமும், நிர்வாகமும் முறைகேடாக செலவழி த்து விட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மீண்டும் அந்த பணத்தை வழங்குமாறு வலியுறுத்தி கடந்த மே மாதம் 14ஆம், 15 ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு ள்ளது. எனினும், கடந்த ஒகஸ்ட் மாத இறுதிக்குள் அதற்கான நடவடிக்கை எடு க்கப்படுமென தமிழக அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், இதுவரையில் அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லையென போராட்டக்காரர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.