Breaking News

அதிகாரங்களை முறையாக கையாளவில்லையாம் இ.தொ.கா - மனோ

வன்னித் தேர்தல் தொகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டி யிட எண்ணுவது புலியை பார்த்து பூனை வேலி போட்டதைப் போல இருப்ப தாக தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணே சன் விவரித்துள்ளார்.

வன்னியிலுள்ள இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளை அப்பிர தேச தமிழ் மக்கள் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடி தீர்க்க வேண்டுமென  எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நுவரெலியா - மஸ்கெலியா நகரில் நேற்றைய தினம் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மனோ கணேசனிடம், வன்னி தேர்தல் தொகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிடுகின்றமை தொடர்பாக ஊடகவியலா ளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

கடந்த காலங்களில் அதிகாரம் மிக்க கட்சியாக விளங்கிய இலங்கை தொழி லாளர் காங்கிரஸ் தற்போது அதிகாரங்களை முறையாக பயன்படுத்த தவறி உள்ளதாக விவரித்துள்ளார்.