இலங்கை - இந்தியா அணிகளுக்கு டெல்லியில் ஏற்படும் தடைகள் என்ன ?
காற்று மாசு காரணமாக டெல்லியில் நடைபெற்றுவரும் இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான போட்டிக்கு அடிக்கடி தடையேற்பட்டுள்ளது.
இதுபோன்று கிரிக்கெட் வரலாற்றில் பல விநோத காரணங்களுக்காக ஆட்டம் தடைப்பட்டிருக்கிறது.
1951 ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல்நாளில் துடுப்பெடுத்தாடியிருந்த போது, இங்கிலாந்து நாட்டின் மன்னர் மரணமடைந்ததால் வீரர்கள் இங்கிலாந்து திரும்பினர்.
1980ஆ-ம் ஆண்டு மும்பையில் இந்தியா – - இங்கிலாந்து இடையேயான ஆட்டம் நடைபெற்றது. அப்போது சூரிய கிரகணம் என்பதால் இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
1984 ஆண்டு பாகிஸ்தானில் இந்திய அணி 40 ஓவர்கள் ஆடியிருந்த நிலை யில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தி எட்டியதும் ஆட்டம் கைவிடப்பட்டது.
1944ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த சமயம், இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதானத்தில் `தி ஆர்மி' அணிக்கும் `தி ரோயல் ஏர்ஃ போர்ஸ்' அணிக்கும் இடையேயான போட்டியின்போது ஜேர்மனி நாட்டின் `டூடுல் பக்' என அழைக்கப்படும் `குண்டு வீசும்' விமானம் ஒன்று லோர்ட்ஸ் மைதானத்தின் மேல் பறந்தது.
இதையடுத்து, வீரர்கள் அனைவரும் அச்சத்தில் தரையில் கவிழ்ந்து படுத்தனர். ஆனால், குண்டு அருகில் உள்ள `ரீஜென்ட் பார்க்கில்' விழுந்தது.