தேர்தல் ஒரே நாளில் இடம்பெற வேண்டுமாம் - பிரதமர் ரணில்
2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதிக்குப் பின்னர் வரும் முதலாவது சனி க்கிழமை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முன்னெடுக்கப்பட வேண்டுமென பிர தமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நடைபெற்ற நிகழ்வொ ன்றில் மேற்குறிப்பிட்டவாறு தெரிவி த்துள்ளார். மேலும் பேசுகையில், தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் தனித்தனியாக நடத்துவ தாக அரசாங்கத்திற்கு உடன்பாடி ல்லையெனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணை க்குழுவிடம் வினாவியபோது எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதியில் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்தல் பெப்ரவரி மாதம் நடைபெறுமென ஸ்ரீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.