அடுத்த வடமாகாண தேர்தலில் முதலமைச்சர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் !
அடுத்த வடமாகாண தேர்தலில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபைக்காக உதய சூரியன்சின்னத்தில் குடியிருப்பு வட்டாரத்தில் போட்டியிடும் இ.கௌதமனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து வழங்கிய அவர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பில் ரெலோ வும் புளொட்டும் இணைந்து போட்டியிடும் கடைசி தேர்தல் இதுதான். ஏதிர்வரும் செப்டெம்பர் மாதம் மாகாணசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் முதலமைச்சர் ஒரு பக்கமும் மாவைசேனாதிராஜா இன்னொரு பக்கமுமாக போட்டியிடுவார்கள். இதில் நிச்சயமாக மாவை சேனாதிராஜா வெல்லப்போவதில்லை.
மீண்டும் தற்போதைய முதலமைச்சரே வெல்லுவார்.
மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் தனித்து நிற்கப்போவதும் இல்லை. ஆனால் பொதுச்சின்னத்திலோ சைக்கிள் சின்னத்திலோ போட்டியிடப்போவதில்லை அவர் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இதேவேளை அரசாங்கத்துடன் பேசி செய்யக்கூடிய சின்னச்சின்ன காரியத்தை கூட எதிர்க்கட்சி தலைவராக இருந்து சம்பந்தன் அவர்கள் செய்யவில்லை. காணாமல் போனோர் விடயம் அரசியல் கைதிகள் விடயம் கேப்பாபிலவு காணி விடயம் உட்பட மக்களின் பல்வேறு விடயங்களை அரசுடன் கலந்துபேசி தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாத எதிர்க்கட்சி தலைவராகவே இவர் உள்ளார்.
ஆனால் தமக்கு தேவையான மாவட்ட அபிவிருத்தி குழு பதவி வீடு வாசல் பங்களா தமக்கு தேவையான சலுகைகளை பெற்றுக்கொண்டார்களே தவிர தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு உருப்படியாக ஒரு காரியமும் செய்யவில்லை.
எதிர்க்கட்சி தலைவராக சம்மந்தன் இருந்தால் கூட உண்மையாகவே அவர் எதிர்க்கட்சி தலைவர் இல்லை. நாம் கண்ட அமிர்தலிங்கம் போன்ற ஒரு எதி ர்க்கட்சி தலைவரை போன்று தமிழர் மத்தியில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் இல்லை.
அமிர்தலிங்கம் அவர்கள் ஒரு நாட்டிற்கு விஜயம் செய்தால் ஒரு நாட்டின் அதிபருக்கு கொடுக்கப்படும் மரியாதைதான் அங்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இன்றைய எங்களது எதிர் கட்சி தலைவர் பதவியானது ஜனாதிபதியினால் ஒரு சன்மானமாகவே வழங்கப்பட்டது.
இது மாத்திரமன்றி பாராளுமன்றத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களில் என்னை தவிர ஏனைய 15 பேருக்கும் 2 கோடி ரூபா பிரதம மந்திரியின் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக அபிவிருத்தி திட்டம் என்ற பேரில் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்னிறுத்தி மக்களிடம் வாக்கை கேட்டு விட்டு இரண்டரை வருடங்களாக அற்ப சலுகைகளுக்காக பின்னால் நிற்கி றார்கள் கூட்டமைப்பினர் எனவே மக்கள் நிதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.