நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கோரிய டோனி !
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது பும்ராவுக்கு நடுவர் அவுட் கொடுக்க முடிவு செய்ததும் உடனடியாக டி.ஆர்.எஸ் கேட்ட டோனியை அவரது ரசிகர்கள் புகழ்ந்த வண்ணமுள்ளனர்.

அதற்குள் எதிர்முனையில் நின்ற டோனி, டி.ஆர்.எஸ்.சைகையை காட்டி விட்டார். பின்னர், சோதனையில் பந்து எதிர்த்திசைக்கு வெளியே செல்வது தெரிந்ததால் பும்ரா ஆட்டமிழக்கவில்லையென அறிவிக்கப்பட்டது.
இக்காட்சி இப்போது சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவுகின்றது. பல ரசிகர்கள்," நடுவரை விரலை முழுமையாக உயர்த்த விடுங்கப்பா.... அதற்குள் என்ன அவ சரம்...."என்று கேலியாக பதி விட்டுள்ளனர்.
இன்னொரு ரசிகர்,"டோனி கள நடுவராக பணியாற்றினால் 3ஆவது நடுவர் மற்றும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்திற்குரிய செலவினங்கள் மிச்சமாகி விடும்"எனத் தெரிவித்துள்ளார். .