70 லட்சம் ரூபா பெறுமதி மிக்க தங்க நகைகள் மீட்பு - விடுதலைப் புலிகளின் புதையல்!
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்க நகைகளை தோண்டிய முன்னாள் போராளி உட்பட மூவரை புதுகுடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன் போது சுமார் 70 லட்சம் ரூபா பெறுமதியுடைய தங்க நகைகளும் பெகோ இயந்திரமும் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகு தியின் விஸ்வமடு பிரதேசத்தில் யுத்த காலங்களில் தமிழீழ விடு தலைப்புலிகளினால் புதைக்கப்பட்ட தங்க நகைகளை பெகோ இயந்திரத்தின் உதவியுடன் முன்னாள் போராளி உட்பட மூவர் தோண்டியுள்ளனர். பெகோ இயந்திரத்தின் உரிமையாளர் பெகோ இயந்திரத்தை காணவில்லையென பொலிஸில் முறைப்பாட்டினை அடுத்து பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் பின்னர் சந்தேக நப ர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 70 லட்சம் ரூபா பெறுமதியுடைய தங்க நகைகளும் பெகோ இயந்திரமும் கைப்பற்றப்பட்டு ள்ளது.
கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ராசரத்ணம் கார்பதி வர்ணன் 22 வயதுடைய நவரத்தினம் ரூபன் மற்றும் 21 வயதுடை பெருமாள் பிரகாஸ் ஆகிய மூவரே கைதாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னி லைப்படுத்தவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்ததுடன் சம்ப வம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.