முன்னாள் போராளி பிறையாளன் இயற்கை எய்தி விட்டார் !
பிறையாளன் என்று அழைக்கப்படும், வவுனியா மாமடு, சேனைப்பிலவைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் சுகயீனம் காரணமாக கடந்த செவ்வா யன்று (05.12.207) உயிரிழந்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் அரசியல் பிரி வின் கோட்டப் பொறுப்பாளராக செய ற்பட்ட இவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு, முல்லைத்தீவு - மாஞ்சோலை வைத்தியசாலையில் கடந்த ஆறு நாட்களாக அனுமதிக்க ப்பட்டிருந்தார்.
இந்நிலையில், திடீரென வலிப்பு ஏற்ப ட்டதன் விளைவாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவி க்கின்றன.
42 வயதுடைய பிறையாளனின் இயற்பெயர், இரத்தினசிங்கம் ஆனந்தராசா எனப்படும்.
இவருக்கு எமது இணையம் சார்ந்த அனுதாபங்களையும் அஞ்சலிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.