மனோ கணேசன் பதவி விலக வேண்டுமாம்- ஜே.வி.பி (காணொளி)
ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு கீழ் உருவாக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றம், தேசிய நல்லிணக்கம் போன்ற அமைச்சுக்களுக்காக செய்யப்பட்ட ஒதுக்கீட்டில் பெரு மளவு நிதி செலவு செய்யப்படாத நிலையில் அமைச்சுக்களை நெறிப்படுத்த முடியாத ஜனாதிபதி உடன் பதவி விலக வேண்டுமென ஜே.வி.பி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி மட்டுமல்லாமல், தேசிய நல்லிணக்கம், மீள்குடியேற்றம் மற்றும் தேசிய கொள்கைத் திட்ட மிடல் போன்ற அமைச்சுப் பதவிகளை வகித்து வருகின்ற மூன்று அமைச்ச ர்களும் இராஜினாமாச் செய்ய வேண்டுமென ஜே.வி.பியின் நாடா ளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய நல்லிணக்கம், மீள்குடியேற்றம் மற்றும் தேசிய கொள்கைத் திட்டமிடல் போன்ற அமைச்சுக்கள் மீதான ஒதுக்கீட்டு விவாதம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் முன்னெடுக்கப்ப ட்டுள்ளது.
இவ் விவாதத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாய க்க, டி.எம் சுவாமிநாதன் தலைமையிலான மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் மனோ கணேசன் தலைமையிலான நல்லிணக்க அமைச்சு ஆகியவற்றுக்கு இவ்வருடத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் அரைவாசியளவு செலவிடப்படா தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
“புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சிற்கு இந்த வருடத்திற்கு 19782 மில்லியன் ரூபா வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும் இறுதியில் 10167 மில்லியன் ரூபாவே பெறப்பட்டுள்ளது.
வடகிழக்கிற்காக கோரப்பட்ட நிதியில் இருந்து அரைவாசி நிதியே பெற்றுக் ஒதுக்கப்பட்டது. அரச சிறைசேரியிலிருந்து கிடைத்த ஆவணத்தின் பிரகாரம் 2017 செப்டம்பர் 31ஆம் திகதி வரை இந்த அமைச்சு 6 மில்லியன் ரூபாவாகவே செலவு செய்திருக்கிறது.
49 வீத நிதியை அமைச்சு செலவிடவில்லை. எதற்காக நீங்கள் அமைச்சுப் பத வியை வகிக்கிறீர்கள்?
ஜனாதிபதியின் கீழ் உள்ள நல்லிணக்க அமைச்சுக்கு கடந்த வருடம் 3532 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் 325 மில்லியன் ரூபாவே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 9 வீத நிதியே செலவு செய்யப்பட்டுள்ளது. 91 வீதம் செலவிடப்பட வில்லை. அமைச்சர் அப்பதவியிலிருந்து விலக வேண்டும். தனக்கு கீழிரு க்கும் அமைச்சரிடம் இருந்து வேலைகளை பெற்றுக்கொள்ள முடியா விட்டால் ஜனாதிபதி பதவி எதற்கு?
எமக்கு நபர் அவசியமில்லை.
பதவியையே பார்க்கின்றோம். அடுத்த அமை ச்சான தேசிய கொள்கைத் திட்டமிடல் அமைச்சிற்கு கடந்த வருடம் 1063 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், 474 மில்லியன் ரூபாவே பெற்றுக் கொள்ளப்பட்டது. அதில் செப்டம்பர் 31ஆம் திகதிவரை 55 வீத நிதி செலவு செய்யப்படவில்லை.
அதனால் மிகவும் தெளிவாக கேட்கிறேன் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்? எனவே இந்த அமைச்சுக்களுக்கு அடுத்த வருடத்திற்காக ஒதுக்கீடு செய்யப்ப டும் நிதியும் அவசியமற்றதாகிவிடும்” என்றார்.
இதேவேளை இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, போர் முடிந்து 10வது வருடத்தை அணிமித்திருக்கும் நிலை யில் போரினால் இடம்பெயர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் அகதிகளாகவே முகாம்களில் வாழ்ந்து வருவதாக தெரிவித்து ள்ளார்.
“யுத்தம் முடிந்து 8 வருடங்களாகின்றன. ஆனால் வடக்கில் 29 நலன்புரி நிலை யங்களில் 3000 இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் இருக்கின்றனர். போர் முடிந்து 10 வருடங்களை அண்மிக்கின்ற நிலையிலும் இடம்பெயர்ந்த மக்களை முழு மையாக குடியமர்த்தவில்லை.
இவர்களுக்காக நடவடிக்கை என்ன ? அதேபோல விடுதலைப் புலிகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட மக்கள் காணிகள் எப்போது மீண்டும் மீள அளிக்க ப்போகின்றீர்கள்?
இன்னும் 5000 ஏக்கர் பகுதி வடக்கில் இராணுவம் வசமிருக்கிறது. அவை எப்போது மீளளிக்கப்படவுள்ளது? என வினாவினார்.
இதேவேளை இதற்கு பதிலளித்து உரையாற்றிய மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு க்களை முழுமையாக நிராகரித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் சுவாமிநாதன் “தமது 2016ஆம் ஆண்டில் 11253 வீடுகளும், 7598 சுகாதார சுத்திகரிப்பு அலகுகள், 1293 நலன்புரி நிலை யங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2216 வீடுகள் திருத்தப்பட்டன, மேலதிகமாக 1800 பாதைகளும், 27 வைத்தியசாலைகள், 66 பாடசாலை கட்டிடங்கள் புனர மைப்புச் செய்யப்பட்டன.
8900 குடிநீர் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன. 2017ஆம் ஆண்டில் 9000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதோடு அதில் 5811 வீடுகள் நிர்மாணி க்கப்பட்டன.
இதுபோன்று 2017ற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 91 வீதம் செலவு செய்யப்பட்டது.
எனவே பிழையான தகவல்களை சபையில் வெளியிட வேண்டாம்.நீங்கள் இந்த தரவுகளை எங்கே இருந்து பெற்றீர்கள் என்பதை அறிய எனக்கு அவசிய மில்லை என்ற போதிலும் எனது அமைச்சுக்கு வந்தால் தகவல்கள் முழு வதையும் தருவதற்கு நான் தயார்” என்றார்.