பொதுஜன பெரமுனவின் தலைவரா் பதவியாம் மஹிந்தவிற்கு !
ஒன்றிணைந்த பொதுஜன பெரமுனவின் தலைமை பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஏற்கவுள்ளார்.
ஜனவரி 2 ஆம் திகதி சுகததாச அர ங்கில் 20 கட்சிகளை இணைத்த புதிய கட்சியாக ஒன்றிணைந்த பொதுஜன முன்னணியாக இணையும் மாநா ட்டில் இதனை தெரிவிக்கவுள்ளதாக பொதுஜன முன்னணி வட்டாரங்க ளின் மூலமாக தெரிவிக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகராக செயற்பட்ட போதிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எந்தவொரு செயற்பாட்டிலும் அவர் பங்குகொள்ளவில்லை.
அதேபோல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பிலும் எந்தவொரு பொறுப்பினையும் இதுவரையில் பெற்றிருக்கவும் இல்லை.
அவ்வாறான நிலையில் தற்போது புதிதாக 20 கட்சிகளை இணைத்து ஒன்றிணைந்த பொதுஜன முன்னணியாக உருவாகும் பொதுஜன முன்னணியின் தலைமை பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பெற்றுகொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஒன்றிணைந்த பொதுஜன முன்னணியாக மாற்றம் பெறவுள்ள நிலையில் அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தனது தலைமை பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது பொதுஜன முன்னணிக்கு சக்தியாக முன்னெடுக்கப்படும் இச் செயற்பாடுகள் மாபெரும் மாநாடாக 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்களில் இடம்பெறவுள்ளது. இதன் போதே இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது.
ஆகவே இது குறித்து தம்முடன் இணைந்து செயற்படும் சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதுடன் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் பொதுஜன முன்னணியின் பிரதான நபர்களுடன் விசேட சந்திப்பொன்றும் நடைபெற்றுள்ளது.
இவ்வேளையே இவ்வாறான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒன்றிணைந்த பொதுஜன முன்னணி நாட்டின் சகல பகுதிகளிலும் மிகப்பெரிய அளவில் மக்கள் சந்திப்புகள் மற்றும் கூட்டங்களை நடத்தவுள்ளதுடன் அனைத்து கூட்டங்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமை தாங்குவார் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசாங்கதின் அங்கம் வகிக்கும் முக்கிய நபர்கள் சிலருடனும் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் சிலரை பொதுஜன முன்னணி யுடன் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருவ தாகவும் பொதுஜன முன்னணியின் மூலமாக தகவல்கள் கிடைக்கப்பெற்று ள்ளன.