பெற்றோர் வெட்டிய குழியில் விழுந்த ஆண் குழந்தை இறப்பு - கிளிநொச்சி ஸ்கந்தபுரம்!
கிளிநொச்சி – ஸ்கந்தபுரம், கண்ணகிபுரம் பிரதேசத்தில் பெற்றோரால் வெட்ட ப்பட்டிருந்த குழியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்து ள்ளது.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கி ழமை மாலை நடைபெற்றதாக அக்க ரையான் பொலிஸார் தெரிவித்துள்ள னர். ஸ்கந்தபுரம் – கண்ணகிபுர பிரதே சத்தில் நாளாந்தம் பயன்படுத்தி வரும் கிணற்றின் அருகில் தண்ணீர் மோட்டார் பொருத்துவதற்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த குழியில் இக் குழந்தை தவறி விழுந்து இறந்துள்ளது.
பெற்றோரின் கவனயீனமே இதற்கான காரணமாக உள்ளதாகவும் குழந்தை யின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை அக்கரையான் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.